twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தடையின்றி நடத்துவோம் இளையராஜா 75.. உறுதியாக சொல்கிறார் விஷால்

    By Keerthi Arunachalam
    |

    சென்னை:இளையராஜா 75 என்ற நிகழ்ச்சிஎந்த தடையும் இல்லாமல் நடைபெறும். நீதிமன்றத்தில் உள்ள வழக்கினை முறையாக சந்தித்து நிச்சயமாக வெற்றி பெறுவோம் என்று தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் கூறியுள்ளார்.

    இளையராஜாவின் 75வது பிறந்தநாள் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பாக, 'இளையராஜா 75' எனும் விழா வெகு பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

    No body cant stop illayaraja 75 function says actor vishal in chennai

    சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் வருகிற பிப்ரவரி 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் இவ்விழா விழா நடைபெறவுள்ளது. 2-ம் தேதி தென்னிந்தியத் திரையுலகின் முக்கியப் பிரபலங்கள் கலந்து கொள்ளும் கலை நிகழ்ச்சியும், 3-ம் தேதி இளையராஜாவின் இசை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

    இந்த விழாவுக்கு திரையுலகின் முன்னணி பிரபலங்களை தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் மற்றும் முக்கிய உறுப்பினர்கள் நேரில் சென்று அழைப்பு விடுத்து வருகிறார்கள்.முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ், அமைச்சர் கடம்பூர் ராஜூ உள்ளிட்டவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    ரஜினி மற்றும் கமல் இருவரையும் நேரில் சந்தித்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் சென்னையில் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: இளையராஜாவை கவுரவிக்கும் நிகழ்ச்சியில் எந்த முறைகேடும் நடைபெற வில்லை. இளையராஜா நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு யாராலும் பூட்டு போட முடியாது.

    மார்ச் மூன்றாம் தேதி தயாரிப்பாளர் சங்கப் பொதுக்குழு கூட்டம். அப்போது எல்லா கணக்குகளையும் சமர்ப்பிப்போம். இளையராஜா 75 எந்த தடையும் இல்லாமல் நடைபெறும்.

    நீதிமன்றத்தில் உள்ள வழக்கினை முறையாக சந்தித்து நிச்சயமாக வெற்றி பெறுவோம். நிகழ்ச்சிக்கான எல்லா ஏற்பாடுகளை செய்து வருகிறோம். எந்த தடையும் ஏற்படாது என்று கூறினார்.

    English summary
    No body cant stop illayaraja 75 function says actor vishal in chennai.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X