எது மணி ஹெய்ஸ்ட் பாலிவுட்டா... திறுதிறுவென முழித்த பயில்வான் ரங்கநாதன்... துணிவுக்கு வந்த சோதனை!
சென்னை: விஜய் நடித்துள்ள வாரிசு, அஜித்தின் துணிவு படங்கள் இன்று திரையரங்குகளில் வெளியாகின.
ரசிகர்களின் அதிக எதிர்பார்ப்போடு வெளியான இந்த இரண்டு திரைப்படங்களுக்கும் கலவையான விமர்சனங்களே கிடைத்துள்ளன.
ஆனாலும் 2023ம் ஆண்டு கோலிவுட்டில் முதல் பாக்ஸ் ஆபிஸ் சம்பவத்தை துணிவு, வாரிசு திரைப்படங்கள் படைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், துணிவு திரைப்படம் குறித்து பயில்வான் ரங்கநாதன் சொன்ன ஒரு வார்த்தை ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

துணிவோடு மோதிய வாரிசு
எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு அஜித், விஜய் திரைப்படங்கள் பொங்கலுக்கு வெளியாகியுள்ளன. அஜித்தின் துணிவும் விஜய்யின் வாரிசும் ஒரேநாளில் ரிலீஸானதால், தியேட்டர்கள் முன்பு திரண்ட ரசிகர்கள் வெறித்தனமாக கொண்டாடி வருகின்றனர். இரண்டு படங்களும் கமர்சியில் ஹிட் அடித்துள்ளன. இதனால் கோலிவுட்டில் இந்த பொங்கலுக்கு தரமான பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் உறுதியாகியுள்ளது.

முதல் வாரம் டிக்கெட்டுகள் சோல்ட் அவுட்
பொங்கலுக்கு 3 தினங்கள் இருக்கும் முன்னரே இரண்டு படங்களும் வெளியானதால், இந்த வாரம் முழுவதும் தியேட்டர் திருவிழா கோலம் பூண்டிருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. இரண்டு படங்களுக்குமே மேலும் முதல் வாரத்திற்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. பொங்கல் விடுமுறை வரை வாரிசு, துணிவு படங்களுக்கு டிக்கெட் கிடைப்பது கஷ்டமே என்ற சூழல் உருவாகியுள்ளது.

பயில்வான் ரங்கநாதனிடம் கேள்வி
துணிவு, வாரிசு இரண்டுமே பாக்ஸ் ஆபிஸ் ஹிட்தான் என்பது உறுதியாகியுள்ளது. இதனை விஜய், அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதனிடையே சினிமா விமர்சகர்களும் வாரிசு, துணிவு படங்கள் பற்றி தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தியேட்டரில் படம் பார்த்துவிட்டு திரும்பிய பயில்வான் ரங்கநாதனிடம் துணிவு படம் குறித்து கேட்கப்பட்டது. யூடியூப் சேனல் சார்பில் பேட்டியெடுத்த நபர், பயில்வானிடம் துணிவு படம் பற்றி கருத்து கேட்டர்.

மணி ஹெய்ஸ்ட் - பாலிவுட்
அப்போது அவர் துணிவு திரைப்படம் மணி ஹெய்ஸ்ட் மாதிரி இருப்பதாக ரசிகர்கள் கூறுகின்றனர். அதுபற்றி என்ன சொல்றீங்கன்னு கேட்க, பயில்வானுக்கு அது சரியாக கேட்கவில்லை. மீண்டும் என்னவென்று கேட்க, பாலிவுட்டில் வந்த மணி ஹெய்ஸ்ட் மாதிரி தான் துணிவு திரைப்படம் உள்ளதா என கேட்கிறார். இதனை கேட்டு காண்டான பயில்வான் ரங்கநாதன், நோ கமெண்ட்ஸ் என அந்த பெண்ணை முறைத்து பார்த்துவிட்டு செல்கிறார். இந்த வீடியோவை விஜய் ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











