»   »  இந்த நாள் தமிழ் சினிமா 2018-ல் முக்கியமான நாள்!

இந்த நாள் தமிழ் சினிமா 2018-ல் முக்கியமான நாள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
இன்று முதல் தியேட்டரில் புது தமிழ் படம் பார்க்க முடியாது!- வீடியோ

சென்னை : நேற்று (மார்ச் 1)முதல் தென்னிந்திய மொழிகளில் எந்த புதுப்படங்களும் வெளிவராது என தமிழ், மலையாள, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளின் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினர் திட்டவட்டமாக அறிவித்தனர்.

திரையரங்குகளில் திரையிடலுக்கு தேவைப்படும் டிஜிட்டல் தொழிநுட்ப சேவைகளை வழங்கும் நிறுவனங்களான கியூப் மற்றும் யூ.எஃப்.ஓ வசூலிக்கும் அதிகப்படியான தொகையைக் கண்டித்து மார்ச் 1 முதல் தென்னிந்திய மொழிகளான தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் எந்தப் புது திரைப்படமும் திரையரங்குகளில் வெளியாகாது என ஏற்கெனவே முடிவு செய்திருந்தனர்.

No movies release in this week

டிஜிட்டல் சேவைகள் வழங்கும் நிறுவனங்களுடன் இதுவரை நடந்த பேச்சுவார்த்தையில் எந்த விதமான சுமூகமான முடிவும் எட்டப்படாததால் அறிவித்தபடி ஸ்ட்ரைக் நடைபெற்றது. சென்னை உட்பட எல்லா நகரங்களிலும் நேற்றும், இன்று புதுப்படம் எங்கும் திரையிடப்படவில்லை.

கடந்த ஆண்டில் ஜி.எஸ்.டி வரிவிதிப்பு, கேளிக்கை வரி உயர்வு போன்ற காரணங்களால் தமிழ் சினிமாவில் இரண்டு வாரம் படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை. அப்படியும் கடந்த ஆண்டு 200 படங்கள் ரிலீஸ் ஆகியிருந்தன.

இந்த ஆண்டு, மூன்றாவது மாதத்திலேயே திரையுலகம் ஸ்ட்ரைக்கை தொடங்கி இருக்கிறது. சினிமாவை மட்டுமே நம்பி வாழும் பலர் இந்த ஸ்ட்ரைக்கால் பாதிக்கப்படுவார்கள். அரசும், டிஜிட்டல் சேவை வழங்கும் நிறுவனங்களும் மனது வைத்தால் தான் தமிழ் சினிமாவிற்கு நல்ல காலம் உருவாகும்.

English summary
Film Producers council of Tamil, Malayalam, Telugu and Kannada film industry have made it clear that no new releases from March 1. Accordingly, no South Indian film has been released yesterday and today.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil