»   »  கேளிக்கை வரிக்கு எதிராக போராட்டம்: இன்று முதல் புதுப்படங்கள் ரிலீஸ் இல்லை

கேளிக்கை வரிக்கு எதிராக போராட்டம்: இன்று முதல் புதுப்படங்கள் ரிலீஸ் இல்லை

Posted By:
Subscribe to Oneindia Tamil
மீண்டும் சேரும் டைட்டானிக் கூட்டணி-வீடியோ

சென்னை: கேளிக்கை வரியை ரத்து செய்யக்கோரி தமிழகத்தில் இன்று முதல் புதிய படங்கள் வெளியிடப்படாது என்று தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஜிஎஸ்டி வரிவிதிப்பு வந்த கையோடு மாநில அரசுகள் கேளிக்கை வரியை விதிக்க அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி தமிழகத்தில் 30 சதவீதம் கேளிக்கை வரி அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து தியேட்டர் உரிமையாளர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

No new movie releases in TN from today

இந்நிலையில் இந்த கேளிக்கை வரியை தமிழக அரசு 10 சதவீதமாக குறைத்தது. நுழைவுக் கட்டணத்தை முறைப்படுத்தாமல் கேளிக்கை வரி விதித்துள்ளது பெரும் இழப்பை ஏற்படுத்தும் என்று தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்தது.

மேலும் கேளிக்கை வரியை ரத்து செய்யக் கோரி இன்று முதல் தமிழகத்தில் எந்த புதுப்படங்களும் ரிலீஸாகாது என்று தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தமிழ் மட்டும் அல்ல பிற மொழிப்படங்கள் கூட இன்று முதல் ரிலீஸாகாது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
As announced by the TN film producers council, new movies won't be released in the state from today protesting against entertainment tax.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil