சிறப்பான சம்பவம் காத்திருக்கு போல...தளபதி 67 அறிவிப்பு வரல...ஆனா அப்டேட் வந்தாச்சு

சென்னை : விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு தளபதி 66 டீம் நேற்று முதல் அடுத்தடுத்த அப்டேட்களை வெளியிட்டு அசத்தி உள்ளது. இதை ரசிகர்கள் ஒரு பக்கம் கொண்டாடி வந்தாலும், மற்றொரு புறம் ட்ரோல் செய்து வருகின்றனர்.

விஜய்யின் தளபதி 66 படத்திற்கு வாரிசு என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக ஃபர்ஸ்ட்லுக்குடன் அறிவித்தனர். இதைத் தொடர்ந்து இன்று காலை செகண்ட் லுக்கை வெளியிட்டனர். இதை ரசிகர்கள் கொண்டாடி முடிப்பதற்குள் மூன்றாவது லுக்கையும் வெளியிட்டு விட்டார்கள்.

வாரிசு என்ற டைட்டலால் படத்தின் கதை என்னவாக இருக்கும். சோஷியல் மீடியாவில் சொல்லப்படுவதை போல் காப்பியா இல்லை போஸ்டர் மட்டும் தான் ரஜினி பட காப்பியா என பெரிய விவாதமே நடத்தி வருகிறார்கள்.

தளபதி 66 ஃபர்ஸ்ட் லுக் வந்தாச்சு

தளபதி 66 ஃபர்ஸ்ட் லுக் வந்தாச்சு

எப்படி இருந்தாலும் தளபதி 66 டீம் சொன்னபடி டைட்டில், ஃபர்ஸ்ட் லுக், செகண்ட் லுக், மூன்றாவது லுக் என வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி விட்டார்கள். ஆனால் தளபதி 66 படத்தை போல் தளபதி 67 படத்தின் முக்கிய அறிவிப்பு என தகவல் வெளியானதால் ரசிகர்கள் ஆவலாக காத்திருந்தனர்.

 தளபதி 67 அறிவிப்பு வரலியே

தளபதி 67 அறிவிப்பு வரலியே

தளபதி 67 படத்தை டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்க போகிறார் என்பதை அவரே கன்ஃபார்ம் செய்து விட்டார். இதனால் விஜய் பிறந்தநாளில் தளபதி 67 படம் பற்றிய முக்கிய அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிடுவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். வாரிசு படத்தை கொண்டாடி வரும் நிலையில் தளபதி 67 அறிவிப்பு வராததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

அட செம அப்டேட் வந்திருக்கு

அட செம அப்டேட் வந்திருக்கு

இப்படி எதிர்பார்ப்பை கிளப்பி, ஏமாற்றி விட்டீர்களே என புலம்பி வருகின்றனர். ஆனால் படத்தின் அறிவிப்பு வெளியிடாவிட்டாலும் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. விக்ரம் படத்தின் டீம், தளபதி 67 படத்திலும் இணைய உள்ளதாம். நரேன், ஜாஃபர், அர்ஜுன் தாஸ் ஆகியோர் இந்த படத்திலும் இணைய உள்ளனராம்.

ஷுட்டிங் எப்போ ஆரம்பம்

ஷுட்டிங் எப்போ ஆரம்பம்

அதே சமயம் தளபதி 67 படம் வழக்கமான லோகேஷ் கனகராஜ் படமாக இருக்காதாம். லோகேஷ் யுனிவர்ஸ் படமாகவும் இல்லாமல் தனித்துவமான படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. அக்டோபர் மாதம் 2 ம் தேதி படத்தின் ஷுட்டிங் துவங்கப்பட உள்ளதாக கூறப்பட்டு வருகிறது.

இந்த படங்களின் தொடர்ச்சியா

இந்த படங்களின் தொடர்ச்சியா

தளபதி 67 படத்தில் நரேன், அர்ஜுன் தாஸ் ஆகியோர் இணைந்திருப்பதாக கூறப்படுவதால் ஒருவேளை மாஸ்டர் படத்தின் தொடர்ச்சியா அல்லது அடுத்து இயக்க போகும் கைதி 2 படத்திற்கும் இதற்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா என ரசிகர்கள் ஆர்வமாக கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X