Don't Miss!
- Lifestyle
Today Rasi Palan 02 February 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் வேலையில் தலையிடாமல் இருப்பது நல்லது...
- News
அடேங்கப்பா.. "ட்விஸ்ட்டு".. எடப்பாடி பல்டி.. அண்ணாமலைக்கு போன் போட்ட சீனியர்கள்.. காத்து திரும்புதே!
- Automobiles
மாருதி, ஹூண்டாயை அண்ணாந்து பாக்க வைத்த டாடா! சம்பவம் லோடிங்! தளபதி 67-ஐ விட எதிர்பார்ப்பு எகிறிகிட்டே போகுது!
- Sports
டி20 வரலாற்றில் இந்தியாவின் மகத்தான வெற்றி.. 3வது டி20ல் சுப்மன் கில் தந்த ஷாக்.. ஆடிப்போன நியூசி!
- Finance
மூலதன செலவு ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. நிதியமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
- Technology
அந்த ஹார்திக் பாண்டியா போன் நியாபகம் இருக்கா? அறிமுக தேதி உறுதி! விலை இதுதானா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
கடைசி வரை அப்போ பேசத்தான் போறீங்க.. ரெட் கார்டு இல்லை.. அசீம் தான் அப்போ டைட்டில் வின்னரா?
சென்னை: இந்த வாரம் ஷோவே போரிங்காக சென்ற நிலையில், வெள்ளிக்கிழமை ஷூட்டிங்கிற்கு முன்பாக சண்டை வரவைக்க வேண்டும் என ரேங்கிங் டாஸ்க்கை மீண்டும் கொண்டு வந்தனர்.
பற்ற வைத்த நெருப்பு சரியாக பற்றிக் கொண்ட நிலையில், வழக்கம் போல அசீம் இஷ்டத்துக்கு கத்த ஆரம்பித்தார்.
ஷிவினை மறுபடியும் 'வாடா டேய்' என அவர் சொன்னதாக அவரை வெளியேற்ற வேண்டும் என ரசிகர்கள் கொந்தளித்து வரும் நிலையில் இந்த வாரமும் கமல் பேசப் போவதாக வெளியாகி உள்ள முதல் ப்ரமோவை ரசிகர்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.
ஆயிஷா..
ஜனனி..
தனா..
என்ன
பெண்
போட்டியாளரா
வெளியேத்துறாங்க..
பிக்
பாஸில்
எதிரொலிக்கிறதா
ஆணாதிக்கம்?

வெளியேறுகிறாரா கமல்
பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து அதிரடியாக கமல் வெளியேறி சிம்பு ஹோஸ்ட்டாக வந்தார். இந்நிலையில், மீண்டும் கமல் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறப் போவதாக தகவல்கள் பரபரக்கின்றன. இந்தியன் 2 படப்பிடிப்பு மற்றும் அரசியல் என மீண்டும் பிசியானதால் இப்படியொரு முடிவை அவர் எடுக்கப் போவதாக கூறுகின்றனர்.

சண்டை போடுவதற்காகவே
இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியே செம போரிங் என ரசிகர்கள் மற்றும் வனிதா உள்ளிட்ட பிரபலங்களே கழுவி ஊற்றிய நிலையில், மீண்டும் கடைசியாக ரேங்கிங் டாஸ்க் கொண்டு வந்து பிக் பாஸ் வீட்டில் வெற்றிகரமாக சண்டையை உருவாக்கினர். அதில், அசீம் வழக்கம் போல அத்தனை பேரையும் அநாகரிகமாக பேச விக்ரமன், அசீம் மற்றும் ஷிவின் உள்ளிட்ட போட்டியாளர்கள் பெரும் சண்டையை போட்டனர்.

வாடா டேய்
ஏற்கனவே பிரதர் என ஷிவினை அசீம் அழைத்து அசிங்கப்படுத்தினார் என பிரச்சனைகள் கிளம்பின. இந்நிலையில், மறுபடியும் இந்த சண்டையின் போது வாடா டேய் என ஷிவினை பார்த்து அசீம் அழைத்ததாக நெட்டிசன்கள் பொங்கி வருகின்றனர். திருநங்கை போட்டியாளர் என்றே கருதாமல் இந்த சீச்னில் ஷிவினை அனைவரும் சகோதரியாக பார்த்து வரும் நிலையில், அசீம் மட்டும் இப்படி வன்மத்தை கக்கிக் கொண்டு இருக்கிறார் என கமெண்ட்டுகள் பறக்கின்றன.

ரெட் கார்டு இல்லை
இந்த வாரம் தனலட்சுமி வெளியேறினார் என்றும் அசீம் கடைசியாக சேவ் செய்யப்பட்டு கமல்ஹாசனிடம் பயங்கரமாக ரோஸ்ட் செய்யப்பட்டார் என்றும் தகவல்கள் கசிந்துள்ள நிலையில், இந்த வாரமும் அவருக்கு ரெட் கார்டு இல்லையா என ரசிகர்கள் ரொம்பவே அப்செட் ஆகி உள்ளனர்.

கடைசிவரைக்கும் பேசுவார் போல
முதல் வாரமே அசீமை எச்சரித்த கமல் இனிமேல் இப்படி பண்ணினால் ரெட் கார்டு நானே கொடுப்பேன் என்றார். அதன் பிறகு ரெட் கார்டு கொடுத்தால் அது தனக்கு அசிங்கம் என்றார். இந்த வாரமும் அசீமிடம் பேசித்தான் ஆகவேண்டும் என கமல் சொல்வதை கேட்ட ரசிகர்கள், கடைசி வரை நல்லா பேசிட்டு டைட்டிலை அவருக்கே தூக்கி கொடுத்துடுங்க என கலாய்த்து வருகின்றனர்.

அசீமுக்குத்தான் டைட்டிலா
பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பாலாஜி முருகதாஸ் டைட்டில் வென்றதை போல இந்த சீசனில் அசீம் டைட்டிலை வெல்வாரா அல்லது 4வது சீசன் ஸ்க்ரிப்ட் போல விக்ரமனுக்கு டைட்டிலை கொடுத்து விட்டு அசீமை ரன்னர் அப்பாக கமல் மாற்றுவாரா? என்றும் கணிப்புகள் வலம் வருகின்றன. ஷிவினுக்கு டைட்டில் கொடுத்தால் தான் டிஆர்பி அதிகரிக்கும் என்றும் மூன்று போட்டியாளர்க்ளின் பெயர்கள் டைட்டிலுக்கு அடிபட்டு வருகின்றன.