»   »  தலைவி படம் ரிலீசாகுது.. நாளைக்கு ஷோ இருக்குமா சார்? - லக்ஸ் அரங்கில் ரசிகர்கள்

தலைவி படம் ரிலீசாகுது.. நாளைக்கு ஷோ இருக்குமா சார்? - லக்ஸ் அரங்கில் ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்றும் நாளையும் புதிய படங்கள் வெளியாகும் நிலையில் சென்னை நகரின் பிரதான மால் லக்ஸில் சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது ரசிகர்களை ஏமாற்றத்துக்குள்ளாக்கியுள்ளது.

லக்ஸ் சினிமா நிறுவனம் சசிகலாவின் அண்ணி மகன் விவேக்குக்கு சொந்தமானது. இன்று சசிகலா குடும்பத்தினர் அனைவர் வீடுகளிலும் ரெய்டு நடப்பதால், காலை மற்றும் பிற்பகல் காட்சிகளை ரத்து செய்தது ஜாஸ் சினி்மாஸ்.

No shows in Luxe: Fans disappointed

ரத்தான காட்சிகளுக்கு டிக்கெட் எடுத்த அனைத்து ரசிகர்களுக்கும் டிக்கெட் கட்டணம் திருப்பித் தரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றும் நாளையும் புதிய படங்கள் ரிலீசாக உள்ள நிலையில் ஜாஸ் சினிமாஸ் காட்சிகளை ரத்து செய்தது ரசிகர்களை ஏமாற்றத்துக்குள்ளாக்கியுள்ளது. இன்று உதயநிதி ஸ்டாலினின் இப்படை வெல்லும் படம் வெளியாகிறது. நாளை நயன்தாராவின் அறம் மற்றும் சுசீந்திரனின் நெஞ்சிலே துணிவிருந்தால் படங்கள் வெளியாகின்றன.

இந்தப் படங்களுக்கு ஆன்லைன் மற்றும் நேரில் ரசிகர்களால் டிக்கெட்டுகள் எடுக்க முடியவில்லை. ஐடி ரெய்டு காரணமாக டிக்கெட் வழங்குவதும் நிறுத்தப்பட்டுள்ளது. "சார், நாளைக்கு தலைவி படம் வெளியாகுது (நயன்தாராவின் அறம்). நாளைக்கு தியேட்டரை திறந்துடுவீங்கல்ல," என சீரியஸாகவே ஒருவர் கேட்க, "சாயங்காலத்துக்குள்ள எல்லாம் முடிஞ்சிடும். போய்ட்டு வாங்க", என்றார் லக்ஸ் ஊழியர் ஒருவர்.

English summary
More than hundreds of fans those came to Luxe Mall (Jazz Cinemas) have disappointed due to no shows.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X