»   »  அட்லீயின் இந்த மெர்சல் முடிவால் தளபதி ஃபேன்ஸுக்கு வருத்தம் தான், ஆனால் பரவாயில்லை...

அட்லீயின் இந்த மெர்சல் முடிவால் தளபதி ஃபேன்ஸுக்கு வருத்தம் தான், ஆனால் பரவாயில்லை...

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மெர்சல் படம் ட்ரெய்லரின்றி வெளியாக உள்ளது.

அட்லீ இயக்கத்தில் விஜய், நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் உள்ளிட்டோர் நடித்துள்ள மெர்சல் படம் தீபாவளி ஸ்பெஷலாக வரும் 18ம் தேதி ரிலீஸாக உள்ளது.

தளபதி தீபாவளியை கொண்டாட ரசிகர்கள் தயாராகிவிட்டார்கள்.

மெர்சல்

மெர்சல்

மெர்சல் படத்தின் ட்ரெய்லர் வரும் அதை யூடியூப்பில் பார்த்து புதிய சாதனை படைத்துவிடலாம் என்று தளபதி ரசிகர்கள் ஆவலுடன் இருந்தனர். ஆனால் அவர்களின் எதிர்பார்ப்பு நடக்கவில்லை.

அறிவிப்பு

அறிவிப்பு

மெர்சல் ரிலீஸுக்கு முன்பு ட்ரெய்லர் எதுவும் வெளியிடப்படதாம். இதை இயக்குனர் அட்லீயே செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். தளபதி ரசிகர்களுக்கு ட்ரெய்லர் வராத வருத்தம் லைட்டா உள்ளது.

படம்

படம்

ட்ரெய்லர் வராவிட்டால் என்ன படம் ரிலீஸாகட்டும், தெறிக்கவிடுவோம் என்ற முடிவில் ரசிகர்கள் உள்ளனர். படத்தில் ஒரு விஜய் கதாபாத்திரத்தின் பெயர் தளபதி என்பது குறிப்பிடத்தக்கது.

பட்ஜெட்

பட்ஜெட்

விஜய் படங்களிலேயே பெரிய பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் படம் மெர்சல். பட்ஜெட் மட்டும் அல்ல படத்தையும் பிரமாண்டமாக ரிலீஸ் செய்கிறார்கள்.

விஜய்

விஜய்

படத்தில் தாடி வைத்த விஜய் வரும் காட்சிகள் சும்மா அதிரும் என்று அட்லீ தெரிவித்துள்ளார். இதையடுத்து தாடி விஜய்யை பார்க்கும் ரசிகர்களின் ஆவல் அதிகரித்துள்ளது.

English summary
Vijay starrer Mersal movie is set to hit the screens for Diwali. Director Atlee confirmed that there won't be any trailer before the release.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil