»   »  அது நாங்க இல்லீங்கோ: தங்கச்சியை அடுத்து ட்வீட்டிய ஐஸ்வர்யா தனுஷ்

அது நாங்க இல்லீங்கோ: தங்கச்சியை அடுத்து ட்வீட்டிய ஐஸ்வர்யா தனுஷ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: எங்கள் குடும்பத்தில் யாரும் பீட்டா உறுப்பினர்கள் கிடையாது என இயக்குனர் ஐஸ்வர்யா தனுஷ் தெரிவித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா ஜல்லிக்கட்டுக்கு எதிரான பீட்டா அமைப்பின் உறுப்பினர் என்ற செய்தி பரவியது. இதையடுத்து தான் பீட்டா உறுப்பினர் இல்லை என சவுந்தர்யா ட்விட்டரில் விளக்கம் அளித்தார்.

None of us are members of PETA: Aishwarya Dhanush

இதையடுத்து சவுந்தர்யாவின் அக்காவும், இயக்குனருமான ஐஸ்வர்யா தனுஷ் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

நாங்கள் யாரும் பீட்டா உறுப்பினர்கள் இல்லை. எங்கள் குடும்பம் தமிழகத்தில் நடக்கும் இந்த மாபெரும் புரட்சியில் ஈடுபட்டுள்ள அனைத்து தமிழர்களுக்கும் ஃபுல் சப்போர்ட் தெரிவிப்பதுடன் பெருமைப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

தானோ, தங்கள் குடும்பத்தாரோ பீட்டா அமைப்பின் உறுப்பினர் இல்லை என நடிகர் தனுஷும் அறிக்கை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Aishwarya Dhanush tweeted that, 'None of us are members of PETA n we as a family are proud of every tamilian involved in this massive movement n stand by in full support.'

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil