தப்பு, அட்லியின் நிறத்தை கிண்டல் செய்வது ரொம்பத் தப்பு

By Siva

Recommended Video

Director Atlee: இயக்குநர் அட்லியை நிறத்தின் அடிப்படையில் கிண்டல் செய்த நெட்டிசன்கள்- வீடியோ

சென்னை: இயக்குநர் அட்லியை நிறத்தின் அடிப்படையில் சமூக வலைதளங்களில் கிண்டல் செய்கிறார்கள்.

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

அந்த போட்டியை இயக்குநர் அட்லி பாலிவுட் நடிகர் ஷாருக்கான் அருகே அமர்ந்து கண்டு ரசித்தார்.

ஷாருக்கான்

ஷாருக்கான்

தளபதி 63 படப்பிடிப்பில் பிசியாக இருந்தாலும் சென்னை அணியின் ஆட்டத்தை பார்க்க வந்த அட்லியை அவரின் நிறத்தை வைத்து சமூக வலைதளங்களில் கண்டமேனிக்கு கிண்டல் செய்கிறார்கள்.

நிறம்

நிறம்

நிறத்தில் என்ன உள்ளது? ஒருவரை நிறத்தின் அடிப்படையில் கிண்டல் செய்வது தவறு. அட்லியின் திறமையை தான் பார்க்க வேண்டுமே தவிர அவரின் நிறத்தை அல்ல. வெறும் 3 படங்கள் மட்டுமே இயக்கியிருந்தாலும் அனைவருக்கும் தெரியும் இயக்குநராக உள்ளார் அவர்.

படங்கள்

படங்கள்

விஜய்யை வைத்து ஒரு படமாவது இயக்க மாட்டோமா என்று எத்தனையோ இயக்குநர்கள் தவம் கிடக்கிறார்கள். அப்படி இருக்கும்போது அந்த விஜய்யுடன் 3வது முறையாக இணைந்துள்ளார் அட்லி. காரணம் இல்லாமலா விஜய் அட்லிக்கு கால்ஷீட் கொடுப்பார் என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும்.

திறமை

திறமை

அட்லி கோலிவுட்டின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக உள்ளார். பெரிய தொகையை சம்பளமாக வாங்கிக் கொண்டிருக்கிறார். தொடர்ந்து முன்னணி ஹீரோக்களை வைத்து படம் எடுக்கிறார். அவரின் திறமையை பார்க்க வேண்டுமே தவிர நிறத்தை அல்ல.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X