»   »  படங்களில் நடிக்கும் ஆசை போச்சு: குண்டை தூக்கிப் போட்ட சிம்பு

படங்களில் நடிக்கும் ஆசை போச்சு: குண்டை தூக்கிப் போட்ட சிம்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிக்கும் ஆசை இல்லை. கஷ்டமான நேரத்தில் எனக்கு உறுதுணையாக இருந்தவர்களுக்காகவே படம் பண்ணுகிறேன் என சிம்பு தெரிவித்துள்ளார்.

சிம்பு தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் நடித்து வருகிறார். அதில் அஸ்வின் தாத்தா கதாபாத்திரத்திற்கான டீஸர் வெளியாகி வைரலானது.

இந்நிலையில் சிம்பு ஃபேஸ்புக் லைவ் மூலம் ரசிகர்களுடன் பேசினார். அப்போது அவர் கூறுகையில்,

சந்தோஷம்

சந்தோஷம்

எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. எனக்கு படத்தில் நடிச்சு பெயர் வாங்கி, நிறைய படம் பண்ணனும் என்று எல்லாம் எந்த ஆசையும் இல்லை. எனக்கு கஷ்டமான நேரத்தில் கூட எனக்காக நிறைய பேர் நின்னுறுக்கிறீங்க. அவர்களுக்காக படம் பண்ணனும் என்கிற ஒரே காரணத்தில் தான் படம் பண்ணிக்கிட்டு இருக்கேன்.

போட்டி

போட்டி

நமக்கு இந்த போட்டி, கீட்டி அப்படி எல்லாம் எதுவும் கிடையாது. என்னை நம்புகிறவர்களுக்காக மட்டுமே படம் பண்ணுகிறேன். அச்சம் என்பது மடமையடா படம் உங்களால் தான் வெற்றி பெற்றது.

ஹிட்

ஹிட்

ஏஏஏ படம் ஏன் சந்தோஷமாக இருக்கு என்றால் படத்தோட டீஸரை பார்த்து படம் இப்படி தான் இருக்கும் என நீங்களாக ஏதாவது நினைக்க வேண்டாம். இது வித்தியாசமான படம். உங்களை டீஸ் பண்ண தான் இந்த டீஸர்.

ஏஏஏ

ஏஏஏ

3 கதாபாத்திரங்கள் இருப்பதால் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் தலைப்பு வைத்தோம். நான் இதை சொல்லக் கூடாது. ஆதிக் வந்து கண்டிப்பா என்னை திட்டுவாரு.

கதாபாத்திரம்

கதாபாத்திரம்

அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் 3 கதாபாத்திரங்கள் உள்ளது. ஆனால் அந்த 3 கதாபாத்திரங்களையும் சேர்த்து நான்காவது கதாபாத்திரம் ஒன்று உள்ளது. இதை நான் சொன்னதற்கு ஆதிக் கோபிச்சுக்குவார் என்று நினைக்கிறேன்.

சர்பிரைஸ்

சர்பிரைஸ்

3 கதாபாத்திரங்களின் டீஸர் வெளியிடுவோம். நான்காவது கதாபாத்திரம் படத்தில் சர்பிரைஸா வரும். நான் யார்னு காட்டுறேன் என்பதற்காக படம் பண்ணவில்லை. என்னை சிலருக்கு பிடிச்சிருக்கு அவர்களுக்காக தான் நடிக்கிறேன்.

வெயிட்

வெயிட்

நான் குண்டாகிவிட்டேன், வெயிட் போட்டுடேனு சொல்றாங்க. ஆமாங்க, நான் குண்டாகிட்டேன், வெயிட் போட்டிருக்கிறேன். படத்திற்காக போட்டிருக்கிறேன். நான் எதையும் நிரூபிக்க இங்கு வரல. அதுக்கு பிறகும் உங்க பிரச்சனை என்னவென்று எனக்கு புரியல. எனக்கு தெரியும் நான் என்ன பண்ணிக்கிட்டு இருக்கேன்னு. நான் இவ்வளவு சந்தோஷமா இருந்ததே இல்லை என்றார் சிம்பு.

English summary
Simbu addressed fans via Facebook live. At that time, he said that he is not interested in acting in movies.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil