4 கல்யாணம் இல்ல.. 40 கல்யாணம் கூட பண்ணுவேன்.. சாமியார் ஆகமாட்டேன்.. பிரஸ் மீட்டில் ஆவேசமான வனிதா!
சென்னை: பிக்கப் ட்ராப் படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய வனிதா விஜயகுமார் 4 கல்யாணம் இல்ல 40 கல்யாணம் கூட பண்ணுவேன் என ஆவேசமாக பேசினார்.
நடிகை வனிதா விஜயகுமார் தனது சமூக வலைதள பக்கத்தில் அண்மையில் போட்டோ ஒன்றை ஷேர் செய்தார். அதில் நடிகர் பவர் ஸ்டாருடன் மாலையும் கழுத்துமாக திருமண கோலத்தில் இருந்தார் வனிதா.
வனிதாவின் இந்த போட்டோ பெரும் வைரலானது. பலரும் அந்த போட்டோவை பார்த்து பவர் ஸ்டாருடன் திருமணமா என கேட்டு வந்தனர். சிலர் எந்தப் படத்துக்கான புரமோஷன் இது என்றும் கேட்டு வந்தனர்.

சென்னையில் பிரஸ் மீட்
இந்நிலையில் வனிதா விஜயகுமாரும் பவர் ஸ்டாரும் இணைந்து நடிக்கும் பிக்கப் ட்ராப் படத்திற்கான போட்டோ ஷூட் தான் அது என்பது தெரியவந்துள்ளது. அந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற வனிதா பேசியதாவது, " நான் ரெகுலரா இன்ஸ்டா மற்றும் டிவிட்டரில் போட்டோக்களை ஷேர் செய்து வருகிறேன்.

பவர் ஸ்டாரை பிடிக்கும்
பவர் ஸ்டாருடன் திருமணம் செய்துகொண்டது போல் வெளியிடப்பட்ட புகைப்படம், திரைப்படத்துக்கானது. விளம்பரத்திற்காக வெளியிடப்பட்டது. என்னை பொறுத்தவரை எந்த பப்ளிசிட்டி என்றாலும் பப்ளிசிட்டிதான். எனக்கு பவர் ஸ்டாரை பிடிக்கும். பவர் ஸ்டாரின் நகைச்சுவை மிகவும் பிடிக்கும். நான் தயாரித்த படத்தில் நடித்தபோதே அவரை எனக்கு நன்கு தெரியும். இந்த கான்செப்ட் பிடித்ததால் நான் நடிக்க ஒப்புக்கொண்டேன்.

போட்டோ வைரலாகியுள்ளது
இதுவரை காமெடி கதாப்பாத்திரத்தில் நடிக்கவில்லை. இது க்ளிக்காகும் என பட்டது. ஆகையால் நடிக்க ஒப்புக்கொண்டேன். இந்தப் படத்தை போட்டோ ஷூட்டுடன் ஆரம்பித்தார்கள். அதனால் அந்த போட்டோவை புரமோஷனுக்காக ஷேர் செய்தேன். போட்டோ ஷூட்காக திருமண கோலத்தில் புகைப்படம் எடுக்கப்பட்டது. என்ன நினைத்து அதை பதிவிட்டேனோ, அது நடந்துள்ளது. அந்த புகைப்படம் வைரலாகியுள்ளது.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா
இரண்டு நடிகர்கள் ஒன்று சேர்ந்து புகைப்படம் வெளியிட்டால் அதை திருமணம் என்பதா? இதை சர்ச்சையாக்க வேண்டிய அவசியம் இல்லை. பெண்கள் முன்னேற்றம், பாதுகாப்பு மிகவும் முக்கியம். பெண்களுக்கு தைரியம் வேண்டும். தற்கொலை, பாலியல் வன்கொடுமை போன்ற வன்முறைகளை கடந்துதான் பெண்கள் வர முடிகிறது. இன்றைய சினிமாவில் ஒரு பெண் சூப்பர் ஸ்டார் இருக்க முடியும் என்பதை நயன்தாரா நிரூபித்துள்ளார். உண்மையிலேயே பெருமையாக உள்ளது.

40 கல்யாணம் பண்ணுவேன்
பல நடிகைகள் திருமணத்துக்கு பிறகும் ஹீரோயினாக நடிக்கிறார்கள். பெண்களை தனிப்பட்ட முறையில் யாரும் மட்டம் தட்டக்கூடாது. தனிப்பட்ட வாழ்க்கையில் பெண்களுக்கு சுதந்திரம் தேவை. ஆண்களுக்கு 4,5 திருமணம் நடந்தால் கூட அதை யாரும் பேசுவதில்லை. ஆனால் பெண்களை பேசுகின்றனர். அதனால் தான் பெண்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். நான் தற்கொலை செய்து கொள்ளமாட்டேன். 4 கல்யாணம் அல்ல ; 40 கல்யாணம் கூட பண்ணுவேன். அது என் இஷ்டம். அதுக்கு எனக்கு தைரியம் இருக்கு. வெளிப்படையா பண்ணுவேன்.

ஒருவனுக்கு ஒருத்தி
ஒருவனுக்கு ஒருத்தி என்பது ஒரு ரிலேஷன்ஷிப்ல இருக்கும் போதுதான் ஒருவனுக்கு ஒருத்தி. பிரிந்து போய்விட்ட பிறகு யாருடன் இருக்கிறோமோ அவர்களுக்கு உண்மையாக இருக்க வேண்டும். ஒருவருடன் வாழ்ந்து கொண்டே பலருடன் தொடர்பில் இருப்பது, ஏமாத்துவதுதான் தவறு. நான் 40 கல்யாணம் பண்ண மாட்டேன் எந்த அர்த்தத்தில் சொன்னேன் என்று உங்களுக்கு புரியும். இப்போதைக்கு திருமணம் செய்து கொள்ளும் ஐடியா இல்லை.

சாமியார் ஆக மாட்டேன்
ஜோசியர் சொல்லியிருக்கிறார்.. என்னாகும் என்று தெரியவில்லை. கண்டிப்பாக சாமியார் ஆகமாட்டேன்.
20 வருஷத்துக்கு அப்புறம் மீண்டும் சினிமாவுக்கு வந்துள்ளேன். என் அப்பாவோ புருஷோனோ புடத்தை புரெடியூஸ் பண்ணல. தவறு செய்து விட்டேன், சினிமாவை விட்டு விலகியதால்தான் மூன்று குழந்தைகளுக்கு தாயானேன். அரசியல் பற்றி இப்போது யோசிக்கவில்லை ரிட்டையராக போது பார்த்துக்கொள்ளலாம்.

சரியாக இல்லாவிட்டால் டிராப்
கேரக்டர் அசாஸினேஷன் எந்த விதத்திலும் என்னை பாதிக்காது. என் குழந்தைகளை பாதிக்கும் பயந்தேன். ஆனால் என் குழந்தைகள் ரொம்ப ஸ்ட்ராங். உலகம் எப்படி போகிறது என்பதை புரிந்து கொண்டார்கள். ஒருவரை காரில் ஏற்றி செல்கிறோம், அவர் வழியிலேயே கத்தியை காட்டி மிரட்டினால் டிராப் பண்ணு வேண்டியதுதானே.. சரியாக இல்லாவிட்டால் டிராப் பண்ண வேண்டியதுதான்.

குழந்தைகளை ஒப்பிடாதீர்கள்
எங்க அப்பா அம்மா விவாகரத்து செய்யவில்லை. கடைசி வரை நன்றாகதான் வாழ்ந்தார்கள். ஆனால் எனக்கு 2 முறை விவாகரத்து ஆனது. ஒரு முறை பிரேக்கப் ஆனது. குழந்தைகளை பெற்றோர் கூட ஒப்பிடாதீர்கள். பெற்றோரை குழந்தைகளோடு ஒப்பிடாதீர்கள்.. இவ்வாறு வனிதா


Click it and Unblock the Notifications











