twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பொன்னியின் செல்வனில் மட்டுமல்ல.. பெரும்பாலான படங்களில் மணி ரத்னம் ஸ்டைல் இதுதான்

    |

    இயக்குநர் மணி ரத்னம் தான் இயக்கிய பெரும்பாலான படங்களில் இரண்டுக்கும் மேற்பட்ட ஹீரோக்களை வைத்து இயக்கியுள்ளார்.

    பொன்னியின் செல்வன் மட்டுமல்ல இதுவரை அவர் இயக்கிய படங்களில் ஒரு சில படங்கள் தவிர பெரும்பாலான படங்களில் இரண்டுக்கும் மேற்பட்ட ஹீரோக்கள் நடித்துள்ளனர்.

    மிகப்பெரிய நடிகர்களையே ஒன்றாக நடிக்கவைத்தவர். 150 நாளில் பொன்னியின் செல்வன் 2 பாகத்தையும் முடித்துக்காட்டியவர். இவரது ஆஸ்தான நாயகன் அரவிந்த் சாமி எனலாம்.

     பொன்னியின் செல்வன் படத்தை நானும் எடுக்க போகிறேன்..கலைப்புலி தாணு அதிரடி பொன்னியின் செல்வன் படத்தை நானும் எடுக்க போகிறேன்..கலைப்புலி தாணு அதிரடி

    மல்டி ஹீரோ வெர்ஷனில் ஆஸ்தான ஹீரோ அரவிந்த் சாமி

    மல்டி ஹீரோ வெர்ஷனில் ஆஸ்தான ஹீரோ அரவிந்த் சாமி

    மல்டி ஹீரோக்களை வைத்து பொன்னியின் செல்வம் படத்தை மட்டுமல்ல பெரும்பாலான படங்களில் மணி ரத்னம் அதைத்தான் செய்துள்ளார். இது மற்ற இயக்குநர்களால் முடியாத காரியம், அல்லது ஒரு படத்துடன் முடித்துக்கொள்வார்கள். ஆனால் ஓரிரு படத்தில் ஒரு ஹீரோவை வைத்து எடுத்துவிட்டு பெரும்பாலான படங்களில் பல ஹீரோக்களை நடிக்க வைத்து எடுப்பதுதான் மணிரத்னம் ஸ்டைல். அவரது எந்தெந்த படங்களில் இதை செய்துள்ளார் என்கிற சுவாரஸ்யமான தகவலை பார்ப்போம். இதில் ஒரு சுவையான விஷயம் பெரும்பாலான மல்டி ஹீரோக்களில் அரவிந்த் சாமி கட்டாயம் இருப்பார்.

    மணிரத்னத்தின் சாயல் இல்லாத இதயக்கோயில், பகல் நிலவு

    மணிரத்னத்தின் சாயல் இல்லாத இதயக்கோயில், பகல் நிலவு

    மணிரத்னம் தமிழில் இதயக்கோயில் படத்தின் மூலம் அறிமுகமானார் என்றால் யாராலும் நம்ப முடியாது. காரணம் அவரது வழக்கமான சுருக் வசனங்களான யாரு? சூர்யா..என்னாச்சு? கைது, ஏன்? தெரியாது என்பதுபோல் அல்லது வித்யாசமான உடல் மொழி, உச்சரிப்பு, படத்தின் பெயரை பலமுறை சொல்வதுபோன்ற எதுவும் இல்லாமல் படம் இயல்பாக இருக்கும். பாடல்களும் மண்ணுக்கேற்ற பாடல்களாக இருக்கும். இந்தப்படத்தில் மோகனுடன் கபில்தேவ் என்கிற நடிகரும் அறிமுகமாகியிருப்பார். இந்தப்படமும் இதற்கு பின் வந்த பகல் நிலவு படமும் அவ்வாறே இருக்கும். அதில் ஒரு சில காட்சிகள் பின்னர் நாயகனிலும் வைக்கப்பட்டிருக்கும்.

    மவுனராகத்தில் கலக்கிய கார்த்திக்

    மவுனராகத்தில் கலக்கிய கார்த்திக்

    அடுத்து அவர் இயக்கிய மவுனராகம் படத்தில் மோகன் கதாநாயகனாக நடித்திருப்பார். இந்தப்படத்தில் இடையில் சில படங்கள் தோல்வியால் ஒதுங்கியிருந்த கார்த்திக் ஒரு ரோலில் வருவார். படமே அவரால் தான் வேகமெடுக்கும். குறுகிய நேரமே வந்தாலும் கார்த்திக்கின் நடிப்பால் பின்னர் அவருக்கு ரீ.எண்ட்ரி பலமாக இருந்தது. கமல் நடிப்பில் வந்த நாயகன், கீதாஞ்சலி, அஞ்சலி, ரோஜா, பம்பாய் போன்ற படங்களில் இரண்டு நடிகர்கள் பாலிசி இல்லை. ஆனால் நாயகன் வெளியான அடுத்த ஆண்டே இன்னொரு படம் கொடுத்தார். அதில் மீண்டும் இரட்டை ஹீரோக்கள்.

     கொளுந்துவிட்டு எரிந்த அக்னி நட்சத்திரம்..பாடல்களில் மாஸ் காட்டிய இளையராஜா

    கொளுந்துவிட்டு எரிந்த அக்னி நட்சத்திரம்..பாடல்களில் மாஸ் காட்டிய இளையராஜா

    அந்தப்படம் தமிழ் திரைப்படத்தில் பெரிதும் பேசப்பட்ட அக்னி நட்சத்திரம். இந்தப்படத்தில் கார்த்திக், பிரபு இருவரும் அண்ணன் தம்பிகளாக மாற்றாந்தாய் பிள்ளைகளாக வருவார்கள். படம் முழுவதும் இருவர் இடையேயும் தீப்பொறி பறக்கும். பாடல்கள் இன்றும் கேட்கும்படியாக வித்யாசமான இசையமைப்பை தந்திருந்தார் இளையராஜா. அடுத்து மிகப்பெரிய உச்ச நடிகருடன் மணிரத்னம் இணைந்தார். அவருக்கும் சரி, மணிரத்னத்திற்கும் சரி, பாடல்களுக்கு இசையமைத்த இளையராஜாவிற்கும் சரி இந்தப்படம் ஒரு மைல் கல்.

    தளபதி, தளபதி..ரஜினியின் தளபதி

    தளபதி, தளபதி..ரஜினியின் தளபதி

    மிகப்பெரிய உச்ச நட்சத்திரம் ஆனால் அவர் இன்னொரு உச்ச நட்சத்திரத்துடன் இணைந்தார். அவர்கள் ரஜினிகாந்த்-மம்முட்டி. இருவரும் புகழின் உச்சத்தில் இருந்த நேரம் மணிரத்னத்தின் தளபதி படத்தில் இணைந்து நடித்தது பெரிய வெற்றிப்படமாக மாற்றியது. இதில் அரவிந்த் சாமியும் அறிமுகமானார். மீண்டும் ஒரு தாதாக்கள் படமான இதில் நடிக்க தான் பட்ட கஷ்டத்தைத்தான் பொன்னியின் செல்வன் பட ட்ரெய்லர் விழாவில் ரஜினிகாந்த் என்னங்க உங்க ஃபீல் என்று சுவைபட பேசினார். எனக்கு பொன்னியின் செல்வனில் ஒரு ரோல் கேட்டால் தரமாட்டேன்னு சொல்லிட்டார் என ரஜினி செல்ல சண்டைபோட, உங்க ரசிகர்கள் கிட்ட யாரு திட்டு வாங்குறதுன்னு மணிரத்னம் கேட்டாராம்.

     தமிழகத்தின் பெரும் அரசியல் ஹீரோக்களையும் விட்டுவைக்கவில்லை

    தமிழகத்தின் பெரும் அரசியல் ஹீரோக்களையும் விட்டுவைக்கவில்லை

    அடுத்த படம் திருடா திருடா. இந்தப்படம் கதைக்காக எடுக்கப்பட்டது. ஹீரோக்கள் இளையவர்கள். ஆனந்த் மற்றும் அந்த நேரத்தில் வளரும் நட்சத்திரமாக இருந்த பிரசாந்த். இந்தப்படத்தில் எஸ்.பி. பாலசுப்ரமணியனும் நடித்திருப்பார். அதற்கு அடுத்து சில படங்களை மணிரத்னம் தயாரித்தார். அதில் ஒரு படத்தில் சூர்யா அறிமுகமானார். அந்தப்படம் வசந்த் இயக்கிய படம். அதிலும் விஜய், சூர்யா இருவரும் நடித்திருப்பார்கள். இதற்கு அடுத்து இருவர் என்கிற படத்தை எடுத்தார். மோகன்லால், பிரகாஷ் ராஜ் இருவரும் தமிழக அரசியலின் இரண்டு ஹீரோக்கள் வேஷத்தில் நடித்தனர். மணிரத்னம் அரசியல் ஹீரோக்கள் எம்ஜிஆர், கருணாநிதியையும் விட்டு வைக்கவில்லை.

    அடுத்தடுத்த மல்டி ஹீரோ படங்கள்

    அடுத்தடுத்த மல்டி ஹீரோ படங்கள்

    அடுத்து மணிரத்னம் இயக்கத்தில் வந்த மல்டி ஹீரோ படம் ஆய்த எழுத்து. இந்தப்படத்தில் சூர்யா, மாதவன், சித்தார்த் மூவரும் நடித்திருப்பார்கள். இந்தப்படத்திற்கு அடுத்து இயக்கிய இந்திப்படமான குருவில் பழைய ஹீரோ மிதுன் சக்ரவர்த்தி மற்றும் அபிஷேக் பச்சன் நடித்திருப்பார். அடுத்து எடுத்த ராவணன் படத்தில் விக்ரம், பிரபு, கார்த்தி, பிரித்விராஜ் என பெரும் பட்டாளமே இருக்கும். அடுத்து எடுத்த கடல் படத்திலும் கார்த்திக்கின் மகன் கவுதம் கார்த்தி, அர்ஜுன், அரவிந்த சாமி என மூன்று ஹீரோக்கள் நடித்திருப்பார்கள்.

    செக்கச்சிவந்த வானம், பொன்னியின் செல்வன்

    செக்கச்சிவந்த வானம், பொன்னியின் செல்வன்

    கடைசியாக 2018 ஆம் ஆண்டு எடுத்த தாதாக்கள் படமான செக்கச் சிவந்த வானம் படத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அருண்விஜய் என ஒரு பட்டாளமே நடித்திருக்கும். இந்தப்படமும் கோர்வையாக நிற்காமல் நகரும். செக்கச் சிவந்த வானம் படத்திற்கு பின் மிகப்பிரம்மாண்டமான படத்தை லைகாவுடன் சேர்ந்து பெரும் நட்சத்திரப்பட்டாளத்தை வைத்து ஒரு சரித்திரப்படத்தை 150 நாளில் எடுத்து முடித்தார் மணிரத்னம். இதில் இரண்டு பாகங்கள் வேறு என்பது கூடுதல் தகவல்.

    English summary
    Director Mani Ratnam has directed more than two heroes in most of his films.Apart from Ponni's Selvan, most of the films he has directed so far have featured more than two heroes except for a few films. Mani Ratnam has done the same in most of his films, not just Ponniin Selvam with multi-heroes.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X