கமலுக்கு மட்டுமல்ல இவங்களுக்கும் இன்று தான் பர்த்டே...வாழ்த்துக்களால் நிரம்பிய சோஷியல் மீடியா
சென்னை : உலக நாயகன் கமலஹாசன் இன்று தனது 67 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு ட்விட்டரில் HBDKamalhassan, ikamalhassan, HappyBirthdayKamalHassan போன்ற ஹாஷ்டேக்குகள் உருவாக்கப்பட்டு டிரெண்டிங் ஆக்கப்பட்டுள்ளன. இதில் ஏராளமான ரசிகர்கள், பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
தமிழக முதல்வர் ஸ்டாலின், கவிஞர் வைரமுத்து, டைரக்டர்கள் ஷங்கர், கே.எஸ்.ரவிக்குமார், மோகன்ராஜா, வெங்கட்பிரபு, ஹீரோக்கள் மகேஷ் பாபு, ஆர்யா, ஃபகத்ஃபாசில், மாதவன், நடிகைகள் குஷ்பு, கஸ்தூரி, ராதிகா சரத்குமார், மகள் அக்ஷரா ஹாசன் உள்ளிட்ட பலரும் கமலுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

உதவி செய்யுங்கள்
தனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்த கமல், தற்போது மழை, வெள்ளத்தில் தவிப்பவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்வது தான் தனக்கு கொடுக்கும் சிறந்த பிறந்தநாள் பரிசு என ரசிகர்களிடம் தெரிவித்துள்ளார்.

இவர்களுக்கும் இன்று பிறந்தநாள்
கமலுக்கு மட்டுமல்ல வேறு சில சினிமா பிரபலங்களுக்கும் இன்று தான் பிறந்தநாள். அதனால் அவர்களுக்கும் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருவதால் சோஷியல் மீடியா பக்கங்கள் முழுவதும் பிறந்தநாள் வாழ்த்துக்களால் நிரம்பி உள்ளது. அப்படி வேறு யாரெல்லாம் பிறந்தநாள் கொண்டாடுகிறார்கள் என்பதை இங்கே பார்க்கலாம்.

அனுஷ்கா ஷெட்டி
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் பிரபலமான நடிகையாக திகழும் அனுஷ்கா ஷெட்டி இன்று தனது 40 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதுவரை 50 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் ரெண்டு படத்தின் மூலம் அறிமுகமான அனுஷ்கா, விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, ஆர்யா, விக்ரம் உள்ளிட்ட டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து விட்டார்.

வெங்கட் பிரபு
பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகனான வெங்கட் பிரபு, ஏப்ரல் மாதத்தில் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து சிவகாசி, விகடன், உன்னை சரணடைந்தால், ஜி, மழை,கோவா, மங்காத்தா உள்ளிட்ட பல படங்களில் சப்போர்டிங் ரோலில் நடித்துள்ளார். 2007 ம் ஆண்டு சென்னை 28 படத்தின் மூலம் டைரக்டராக அறிமுகமான வெங்கட் பிரபு, சரோஜா, மங்காத்தா, சென்னை 28 - 2, பிரியாணி உள்ளிட்ட சில படங்களை இயக்கி உள்ளார். தற்போது சிம்புவை வைத்து இவர் இயக்கி உள்ள மாநாடு படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது.

பாடகர் கார்த்திக்
தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட 15 இந்திய மொழி படங்களில் 8000 க்கும் அதிகமான பாடல்கள் பாடி பிரபலமானவர் பாடகர் கார்த்திக். அரவான், பாவ கதைகள், உள்ளிட்ட படங்களுக்கு இவர் இசை அமைத்தும் உள்ளார். தமிழில் ஸ்டார் படத்தில் வரும் நேந்துக்கிட்டேன் பாடல் பாடி தமிழ் சினிமாவில் பாடகராக அறிமுகமான கார்த்திக், மின்னலே, 12பி, மஜ்னு, மனதை திருடி விட்டாய், அழகி, பாபா, ரன், ரோஜா கூட்டம் உள்ளிட்ட ஏராளமான சூப்பர் ஹிட் பாடல்களை பாடி உள்ளார்.

பாடகர் ஸ்ரீநிவாஸ்
தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 2000 க்கும் அதிகமான பாடல்களை பாடி பிரபல பாடகராக வலம் வருபவர் பாடகர் ஸ்ரீநிவாஸ். பல இசை ஆல்பங்களிலும் இவர் பாடி உள்ளார். தமிழில் இவர் பாடிய முதல் பாடலே மணிரத்னம் இயக்கிய உயிரே படத்தில் வரும் என்னுயிரே பாடல் தான். சமீப ஆண்டுகளில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அதிகமான பாடல்கள் பாடியது இவர் தான்.


Click it and Unblock the Notifications











