»   »  எனக்கு சுயபுத்தி இருக்கு, நான் ஏன் விஷால் பேச்சை கேட்கணும்?: குஷ்பு

எனக்கு சுயபுத்தி இருக்கு, நான் ஏன் விஷால் பேச்சை கேட்கணும்?: குஷ்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிடும் முடிவை விஷால் அல்ல தான் எடுத்ததாக நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.

தயாரிப்பாளர் சங்க தேர்தல் அடுத்த மாதம் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு நடிகை குஷ்பு போட்டியிடுவார் என்று நடிகர் விஷால் அறிவிப்பு வெளியிட்டார்.

இது குறித்து குஷ்பு பிரபல ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

என் முடிவு

என் முடிவு

தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிடும் முடிவு என் முடிவு விஷால் முடிவு அல்ல. விஷால் தான் செய்ய நினைப்பதை என்னை வைத்து சாதிக்க உள்ளதாக பிறர் பேசுவதை பற்றி எனக்கு கவலை இல்லை.

விஷால்

விஷால்

மக்கள் பேசுவதை பார்த்தால் விஷாலுக்காக என்னை பலிகடா ஆக்கப் பார்க்கிறார்கள் என நினைக்கிறேன். நல்ல காரியம் செய்ய உள்ளோம். அதில் தான் நான் கவனம் செலுத்துகிறேன்.

படித்த பெண்

படித்த பெண்

நான் நன்கு படித்த பெண். எனக்கு என்று சுயபுத்தி உள்ளது. அதனால் தேர்தலில் போட்டியிட விஷால் என்னை வலியுறுத்தவில்லை. நானாக சுயமாக முடிவு செய்தேன்.

அரசியல்

அரசியல்

மாநில சட்டசபை தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ளன. அதனால் தயாரிப்பாளர் சங்க தலைவராக தேர்வு செய்யப்பட்டால் சினிமா மற்றும் அரசியலுக்கு சம முக்கியத்துவம் அளிக்க முடியும்.

English summary
Actress cum politician Khushbu Sundar said it was not Vishal but she who decided to contest in Tamil Film Producers Council election.

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil