»   »  கபாலி வசூலால் ரஜினிக்கு கண்திருஷ்டி: கிடா வெட்டி கழித்த ரசிகர்கள்

கபாலி வசூலால் ரஜினிக்கு கண்திருஷ்டி: கிடா வெட்டி கழித்த ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருச்சி: கபாலி படம் சூப்பர் ஹிட்டானதால் ரஜினிகாந்துக்கு கண்திருஷ்டி ஏற்பட்டுள்ளதாம். அதனால் ரஜினி ரசிகர்கள் ஆட்டு கிடாக்களை பலி கொடுத்து திருஷ்டி கழித்துள்ளனர்.

பா. ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கபாலி படம் ரிலீஸான அன்றே ரூ.113 கோடி வசூல் செய்ததாக கூறப்பட்டது. இந்தியாவில் கபாலியை தவிர வேறு எந்த படமும் இப்படி ஒரு வசூல் செய்தது இல்லை என்கின்றனர் ரஜினி ரசிகர்கள்.

Oh boy, See what these Rajini fans do for thalaivar

கபாலி படம் இப்படி கண்டமேனிக்கு வசூல் செய்துள்ளதால் ரஜினிக்கு கண்திருஷ்டி ஏற்பட்டுள்ளது என்கிறார்கள் அவரின் ரசிகர்கள். எதுவாக இருந்தாலும் கண்திருஷ்டி மோசமானது என்று கூறிய அவர்கள் கண் திருஷ்டியையும் கழிக்க முடிவு செய்தனர்.

ரஜினிக்கு கண் திருஷ்டியை கழிக்க திருச்சி மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற தலைவர் கர்ணா தலைமையில் இன்று ஆட்டு கிடாக்களை பலி கொடுத்து சிறப்பு பூஜை செய்தனர். இந்த கண் திருஷ்டி கழிப்பு நிகழ்ச்சியில் ரஜினி ரசிகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

ரஜினி ரசிகர்களின் இந்த செயல் பலரையும் வியப்படைய வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Rajini fans sacrificed goats as part of a ritual for their thalaivar.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil