»   »  சுசிலீக்ஸ் ரிட்டர்ன்ஸ்: உடனே ட்விட்டருக்கு ஓடாதீங்க! #suchileaks

சுசிலீக்ஸ் ரிட்டர்ன்ஸ்: உடனே ட்விட்டருக்கு ஓடாதீங்க! #suchileaks

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பாடகி சுசித்ராவின் கணவர் கார்த்திக் குமார் சுசிலீக்ஸ் குறித்து காமெடி நிகழ்ச்சி நடத்த உள்ளாராம்.

பாடகி சுசித்ரா பார்ட்டி ஒன்றில் தனுஷ் ஆட்களால் தாக்கப்பட்டு காயம் அடைந்தார். அதன் பிறகு தனுஷ் உள்ளிட்ட சில பிரபலங்களின் கசமுசா புகைப்படங்களை வெளியிட்டார்.

பின்னர் சுசித்ராவுக்கு மனச்சிதைவு ஏற்பட்டடுள்ளதாக அவரது கணவர் கார்த்திக் குமார் தெரிவித்தார்.

சுசிலீக்ஸ்

சுசிலீக்ஸ்

சுசிலீக்ஸ் என்ற ஹேஷ்டேக்குடன் ஆளாளுக்கு பல கசமுசா புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு ட்விட்டரையே கதறவிட்டனர். தற்போது தான் ட்விட்டர் சுசிலீக்ஸ் ஷாக்கில் இருந்து வெளியே வந்துள்ளது.

கார்த்திக்

கார்த்திக்

சுசிலீக்ஸ் விவகாரம் முடிந்த பிறகு சுசித்ராவை காணவில்லை என்று கூறப்பட்டது. அவர் இருக்கும் இடம் அவர் கணவர் கார்த்திக்கிற்கே தெரியவில்லை என்றெல்லாம் பேசினார்கள்.

அமெரிக்கா

அமெரிக்கா

சுசித்ரா தற்போது தனது கணவர் கார்த்திக்குடன் அமெரிக்காவில் உள்ளார். கார்த்திக் இன்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் சுசியும் உள்ளார்.

காமெடி

கார்த்திக் ஃபேஸ்புக்கில் போட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது, அமெரிக்காவில் உள்ளேன், புதிய காமெடி நிகழ்ச்சிக்கு கதை எழுதிக் கொண்டிருக்கிறேன், செப்டம்பர் 2017ல் ரிலீஸாகிறது. இது எதை பற்றி? என்று கூறிக் கொண்டே கேமராவை மெத்தையில் படுத்துக் கொண்டு புத்தகம் வாசிக்கும் சுசி பக்கம் திருப்புகிறார். பின்னர் கெஸ் பண்ணுங்க என்கிறார் கார்த்திக். சுசிலீக்ஸ் மேட்டரை கார்த்திக் காமெடியாக்கப் போகிறார் என்று கூறப்படுகிறது.

English summary
Standup comedian Karthik Kumar has posted a video on his Facebook page giving a hint that he is going to make fun of Suchileaks.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil