»   »  பாலியல் தொல்லை வழக்கு: அழகேசனுக்கு அமலா பால் நம்பரை கொடுத்தவர் கைது

பாலியல் தொல்லை வழக்கு: அழகேசனுக்கு அமலா பால் நம்பரை கொடுத்தவர் கைது

Posted By:
Subscribe to Oneindia Tamil
அமலா பாலுக்கு பாலியல் தொல்லை குடுத்த தொழிலதிபர் கைது

சென்னை: நடிகை அமலா பாலுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னையை சேர்ந்த தொழில் அதிபர் அழகேசன் என்பவர் தன்னை பாலியல் தொழிலுக்கு அழைப்பது போன்று பேசி பாலியல் தொல்லை கொடுத்தார் என்று நடிகை அமலா பால் போலீசில் புகார் அளித்தார்.

இதையடுத்து போலீசார் அழகேசனை கைது செய்தனர்.

கைது

கைது

அமலா பாலுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தான் அழகேசனின் நண்பரான சென்னை பல்லாவரத்தை சேர்ந்த பாஸ்கர்.

சந்தேகம்

சந்தேகம்

மலேசிய கலை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நான் ஸ்ரீதர் மாஸ்டரின் ஸ்டுடியோவில் நடனப் பயிற்சி செய்கிறேன். நான் அங்கு இருக்கும் நேரம் தெரிந்து தான் அழகேசன் வந்துள்ளார். அவருக்கு நிகழ்ச்சி தொடர்பான யாரோ தான் தகவல் கொடுத்திருக்க வேண்டும் என்று அமலா பால் தெரிவித்திருந்தார்.

மலேசிய நிறுவனம்

மலேசிய நிறுவனம்

கலைநிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ள மலேசிய நிறுவன ஊழியர் தான் பாஸ்கர் என்பது குறிப்பிடத்தக்கது. அமலா பாலை சந்திக்குமாறு தன் நண்பர் பாஸ்கர் தான் அனுப்பி வைத்ததாக அழகேசன் போலீசாரிடம் தெரிவித்திருந்தார்.

டான்ஸ் ஸ்டுடியோ

டான்ஸ் ஸ்டுடியோ

மலேசிய நிகழ்ச்சிக்கு பிறகு தொழில் அதிபர் ஒருவரின் பார்ட்டியில் கலந்து கொள்ள அமலா பால் சம்மதித்துள்ளார். அதை உறுதி செய்யவே என்னை அமலா பாலை சந்திக்குமாறு பாஸ்கர் அனுப்பி வைத்தார் என்று அழகேசன் வாக்குமூலம் அளித்திருந்தார்.

மேனேஜர்

மேனேஜர்

பாஸ்கர் அமலா பாலின் மலேசிய தொடர்பு எண்ணை என்னிடம் அளித்தார். அந்த எண்ணை தொடர்பு கொண்டபோது அமலா பாலின் மேனேஜர் எடுத்து பேசி அவர் இருக்கும் இடத்தை கூறினார் என்று அழகேசன் போலீசில் கூறியிருந்தார்.

English summary
Police have arrested one more person named Bhaskar in the sexual harassment case filed by actress Amala Paul. Earlier they arrested a Chennai based businessman Azhagesan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil