»   »  'நமீதா' எம்.எம்.எஸ்ஸால் பரபரப்பு!

'நமீதா' எம்.எம்.எஸ்ஸால் பரபரப்பு!

Subscribe to Oneindia Tamil
Click here for more images
நமீதா ஆபாச கோலத்தில் இருப்பது போன்ற எம்.எம்.எஸ்.ஸால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

நடிகைகளின் அல்லது நடிகைகளைப் போல இருப்பவர்கள் ஆபாசமாக தோன்றும் எம்.எம்.எஸ்கள் உலா வருவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது.

சமீபத்தில், தென் ஆப்பிரிக்காவில் தனது கணவருடன் மாளவிகா தேனிலவுப் பயணம் மேற்கொண்டபோது எடுக்கப்பட்ட காட்சிகள் என்ற பெயரில் சில வீடியோ காட்சிகள் எம்.எம்.எஸ்கள் மூலம் உலா வந்து பரபரப்பை ஏற்படுத்தின.

இந்த நிலையில் நமீதாவின் பரபரப்பு ஆபாசக் காட்சிகள் அடங்கிய எம்.எம்.எஸ். வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சில தினங்களுக்கு முன்னர் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளின் செல்போன்களில் நமீதா சம்பந்தப்பட்ட எம்.எம்.எஸ். உலா வருவதாக சைபர் கிரைம் போலீஸாருக்குத் தெரிய வந்தது.

இது தொடர்பாக ஏராளமான மாணவர்களிடம் விசாரித்ததில், அவர் அனுப்பினார், இவர் கொடுத்தார் என்றுதான் பதில் வந்ததே தவிர யார் அனுப்பியது என்ற மூலம் தெரியவில்லை.

இந்நிலையில் தான் சுரேஷ் என்ற வாலிபர் சிக்கினார். அவரைப் பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவரிடம் கிராபிக் முறையில் ஏராளமான நடிகைகளின் முகங்களை ஒட்டவைத்து தயார் செய்யப்பட்ட சிடிக்கள் இருப்பதைக் கண்டு போலீஸார் அதிர்ந்தனர்.

சுரேஷ் கம்ப்யூட்டரை வைத்து மிக தத்ரூபமாக கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த ஆபாச வேலையில் வெகு சிரத்தை எடுத்து ஈடுபட்டுள்ளார்.

அவர் தயாரித்த சிடியில் நடிகை நமீதா, குறுந்தாடிக்கார வாலிபருடன் நெருக்கமாக நடந்து வந்து காதல் களியாட்டங்களில் ஈடுபடுவது போல காட்சி அமைத்துள்ளஆர். இந்த சிடி சுமார் 40 நிமிடம் ஓடுகிறதாம்.

இந்த சிடியில் இடம்பெற்றது உண்மையிலேயே நமீதாவா அல்லது வேறு பெண்ணா என்று விசாரணை செய்ய போலீசார் அந்த சிடியை கைப்பற்றி சோதனை நடத்தி வருகிறார்கள். சுரேஷையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

Read more about: namitha
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil