»   »  மாஸ் ஹீரோக்களால் முடியாததை விஜய் சேதுபதியால் மட்டுமே செய்ய முடியும்: கே.வி. ஆனந்த்

மாஸ் ஹீரோக்களால் முடியாததை விஜய் சேதுபதியால் மட்டுமே செய்ய முடியும்: கே.வி. ஆனந்த்

Posted By:
Subscribe to Oneindia Tamil
சென்னை: மாஸ் ஹீரோக்களால் செய்ய முடியாததை விஜய் சேதுபதியால் மட்டுமே செய்ய முடியும் என இயக்குனர் கே.வி. ஆனந்த் தெரிவித்துள்ளார்.

கே.வி. ஆனந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி, மடோனா செபாஸ்டியன், டி. ராஜேந்தர் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் கவண். கே. வி. ஆனந்த் படங்கள் என்றாலே தலைப்பு வித்தியாசமாக இருக்கும்.

அயன், மாற்றான், கோ, அனேகன், கவண் என்று தலைப்பிலேயே வித்தியாசத்தை காட்டி வருகிறார்.

மோசடி

மோசடி

கார்பரேட் மோசடி குறித்த படமே கவண். இந்த படம் நிச்சயம் ரசிகர்களை கவரும். மாஸ் ஹீரோக்களால் செய்ய முடியாததை விஜய் சேதுபதியால் மட்டுமே செய்ய முடியும் என்கிறார் ஆனந்த்.

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி

என் பட ஹீரோ தன்னை பலர் அடித்தாலும் திருப்பி அடிக்காமல் இருப்பார். அத்தகைய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியால் மட்டுமே நடிக்க முடியும் என்று அவரை ஒப்பந்தம் செய்தேன் என ஆனந்த் தெரிவித்துள்ளார்.

டி. ராஜேந்தர்

டி. ராஜேந்தர்

கவண் படத்தில் டி. ராஜேந்தர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரை போன்று சின்சியரான கலைஞரை நான் பார்த்ததே இல்லை. ஒரு காட்சியில் அவருடன் நடித்த சக நடிகர் ஒருவர் 15 டேக்குள் வாங்கியபோதும் கோபப்படாமல் 15 முறை வசனம் பேசி நடித்தார் என ஆனந்த் கூறியுள்ளார்.

மடோனா

மடோனா

காதலும் கடந்த போகும் படம் பார்த்தேன். அதில் விஜய் சேதுபதி, மடோனா செபாஸ்டியனின் கெமிஸ்ட்ரி நன்றாக இருந்தது. கவண் படத்தில் அவர் அருமையாக நடித்துள்ளார் என ஆனந்த் தெரிவித்துள்ளார்.

English summary
Kavan director KV Anand said that only Vijay Sethupathi can do what mass heroes cannot do. His Kavan hero won't hit back when people thrash him.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil