Just In
- 10 min ago
பேக் டூ ஃபார்ம் போல.. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு முதல் முறையாக வீடியோ வெளியிட்ட ரியோ!
- 9 hrs ago
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில்... பழிவாங்குதல்..அன்பின் காவியம்.. ‘நாகினி 5’
- 9 hrs ago
ரெட்ரோ லுக்கில் அசத்தும் ரன்வீர் சிங்.. அசந்து போன ரசிகர்கள்!
- 9 hrs ago
ஜித்தன் ரமேஷின் அறியப்படாத பக்கங்கள்... ரகசியம் சொல்லும் மலையாள இயக்குநர் அபிலாஷ்!
Don't Miss!
- Automobiles
ஏன் அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டும்? சமூக வலை தளங்களில் வைரலாகும் தமிழக அதிகாரியின் வீடியோ!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 22.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் திடீர் பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாம்…
- News
இன்றைய தேதியில் இந்தியாவில் தேர்தல் நடந்தால்.. என்டிஏ கூட்டணி 321 இடங்களை வெல்லும்.. அதிரடி சர்வே..!
- Sports
அண்ணனுக்கு ஒரு ராபின் உத்தப்பா.. "யூத்" வீரரை விலைக்கு வாங்கிய சிஎஸ்கே.. இதுதான் அந்த ஸ்பார்க்கா தல?
- Finance
ஒன் ஸ்டாப் மொபைல் ஆப்.. MSME நிறுவனங்களுக்கு மத்திய அரசின் அசத்தலான சேவை..!
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
எரியுமா.. எரியாதா.. ஹேட்டர்களுக்கு.. குட்டி கதையில உள்குத்து கன்பார்ம்.. டிரெண்டாகும் ஹாஷ்டேக்!
சென்னை: மாஸ்டர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான 'ஒரு குட்டி கதை' பாடல் வரும் காதலர் தினத்தன்று வெளியாகவுள்ளது.
இதுகுறித்து நேற்று வெளியான போஸ்டரிலேயே பல உள்குத்துகளுடன் குறீயிடுகளாக அடுக்கி போஸ்டரை மாஸ்டர் படக்குழுவினர் வெளியிட்டு இருந்தனர்.
அந்த பல்பு யாருக்கு, இப்படி செம்ம ஸ்வாகா உட்கார்ந்து போஸ் கொடுத்திருக்கிறாரே என ரசிகர்கள் நேற்றில் இருந்து தொடர்ந்து #OruKuttiKathai மற்றும் #MasterSingle ஹாஷ்டேக்குகளை டிரெண்ட் செய்து வருகின்றனர்.
|
தெனாவட்டு ஸ்வாக் மேக்ஸ்
ஆடை படத்தின் இயக்குநரும் மாஸ்டர் படத்தின் ரைட்டருமான ரத்னகுமார், ஒரு குட்டி கதை ஃபர்ஸ்ட் சிங்கிள் போஸ்டரை பார்த்து, தெனாவட்டு ஸ்வாக் மேக்ஸ்.. மாஸ்டர் சிங்கிள் இந்த காதலர் தினத்தில் தளபதி ரசிகர்களை காதல் கொள்ள செய்யும் என பதிவிட்டு தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

சூரரைப் போற்று vs மாஸ்டர்
வரும் கோடை விடுமுறைக்கு சூர்யாவின் சூரரைப் போற்று மற்றும் விஜய்யின் மாஸ்டர் திரைப்படங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளை சென்னை விமான நிலையத்தில் சூரரைப் போற்று ஆடியோ லான்ச் நடைபெறுகிறது. நாளை மறுநாள் மாஸ்டர் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகிறது. இதனால், சூர்யா மற்றும் விஜய் ரசிகர்கள் இடையே ட்விட்டர் வார் களைகட்டுகிறது.
|
கையில சரக்கு
சர்கார் போஸ்டரில் சிகரெட் பிடிப்பது போன்ற மாஸான போஸ்டரை ஃபர்ஸ்ட் லுக்காக வெளியிட்டு இருந்தனர். அந்த போஸ்டர் குறித்த சர்ச்சைகள் கிளம்பிய நிலையில், அந்த போஸ்டரை படக்குழு நீக்கினர். இந்நிலையில், மாஸ்டர் படத்தின் 'ஒரு குட்டி கதை' போஸ்டரில் கையில் சரக்குடன், கூலர்ஸ் அணிந்து ஹெட்செட்டில் பாட்டு கேட்டபடி செம்ம ஸ்வாகாக போஸ் கொடுத்துள்ளார் விஜய்.
|
அருண் ராஜா காமராஜ்
ஆளப்போறான் தமிழன், சிமிட்டாங்காரன், வெறித்தனம் உள்ளிட்ட பாடல்களை பாடலாசிரியர் விவேக் எழுதியிருந்த நிலையில், ஒரு குட்டி கதை பாடலை நெருப்புடா பாடலை பாடிய கனா இயக்குநர் அருண் ராஜா காமராஜ் எழுதியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அனிருத் இசையில், அருண் ராஜா காமராஜ் வரிகளில் ஒரு குட்டி கதையில் பல உள்குத்து இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
|
எல்லா புகழும் ஒருவனுக்கே
நெய்வேலியில் ரசிகர்களுடன் இரண்டாவது முறையாக பேருந்து மீது ஏறி, ரசிகர்களின் அன்புக்கு தலைவணங்கி, கையசைத்து நடிகர் விஜய் அன்புக்காட்டியதை தளபதி ரசிகர்கள் ஹாஷ்டேக்குகளை உருவாக்கி டிரெண்ட் செய்து வருகின்றனர். இந்த ரசிகர், எல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கே என்ற பாடலை வைத்து மாஷ் அப் செய்து அசத்தியுள்ளார்.
|
எரியுமா எரியாதா
சர்கார் படத்தில் ராதாரவி பேசும் புகைப்படத்தை மீமாக உருவாக்கி தளபதி ரசிகர்கள் இப்படி டிரெண்ட் செய்து வருகின்றனர். இவருக்கு பிராப்ளம் கொடுத்து ஒரு வாரம் கூட ஆகலை.. இப்போ இப்படி ஒரு ஸ்டில்ல பார்த்தா ஹேட்டர்களுக்கு எரியுமா எரியாதா என கேட்டுள்ளனர். வரும் பிப்ரவரி 14ம் தேதி ஒரு குட்டி கதை பாடலுக்காக தளபதி ரசிகர்கள் மரண வெயிட்டிங்.