»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

லாஸ் ஏஞ்சலஸ்:

ஏவியேட்டர் திரைப்படம் 5 ஆஸ்கர் விருதுகளை தட்டிச் சென்றது. மில்லியன் டாலர் பேபி படத்திற்கு 4 விருதுகள் கிடைத்துள்ளனன.

77வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் நடந்தது. இதில் "ஏவியேட்டர்", "மில்லியன் டாலர் பேபி"ஆகிய இரு படங்களுக்கும் இடையேதான் விருதுகளைப் பெறுவதில் கடும் போட்டி நிலவியது. இதில் ஏவியேட்டர் 5 விருதுகளை வென்றுசாதனை படைத்தது.

"ரே" படத்தில் நடித்த ஜேமி ஃபாக்ஸ், சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றார். சிறந்த நடிகைக்கான விருது மில்லியன் டாலர் பேபியில் நடித்தஹிலாரி ஸ்வாங்குக்கு கிடைத்தது.

ஆஸ்கர் விருதுகள் முழு விவரம்:

சிறந்த நடிகர்: ஜேமி ஃபாக்ஸ் (படம்- ரே)
சிறந்த துணை நடிகர்: மோர்கன் ப்ரீமேன் (மில்லியன் டாலர் பேபி)
சிறந்த நடிகை: ஹிலாரி ஸ்வாங்க் (மில்லியன் டாலர் பேபி)
சிறந்த துணை நிடிகை: கேட் பிளான்செட் (தி ஏவியேட்டர்)
பொழுது போக்கு அனிமேஷன் படம்: (தி இன்கிரடெபிள்ஸ்)
சிறந்த கலை இயக்குனர்: டேன்ட் பெரட்டி, பிரான்செஸ்கா லோ ஸ்வியா (தி ஏவியேட்டர்)
சிறந்த திரைப்படம்: (மில்லியன் டாலர் பேபி)
சிறந்த கேமரா மேன்: ராபர்ட் ரிச்சர்ட்சன் (தி ஏவியேட்டர்)
சிறந்த உடை வடிவமைப்பாளர்: சாண்டி பாவல் (தி ஏவியேட்டர்)
சிறந்த இயக்குனர்: கிளின்ட் ஈஸ்ட்வுட்(மில்லியன் டாலர் பேபி)
சிறந்த பொழுதுபோக்கு டாகுமெண்டரி: பார்ன் இன் டூ பிராத்தல்ஸ்
சிறந்த டாகுமெண்ட குறும்படம்: மைட்டி டைம்ஸ், தி சில்ட்ரன்ஸ் மார்ச்
சிறந்த எடிட்டிங்: தெல்மா ஷூ மேக்கர் (தி ஏவியேட்டர்)
சிறந்த வெளிநாட்டுப் படம்: தி சீ இன்சைட்(ஸ்பெயின் மொழிப் படம்)
கெளவர ஆஸ்கர் விருது: ரோஜர் மேயர் மற்றும் சிட்னி லூமெட்
மேக்கப்: வாலி ஓர்லி மற்றும் பில் கார்சோ
சிறந்த இசையமைப்பாளர்: ஜோன் ஏ.பி. காக்ஸ்மாரெக் (பைன்டிங் நெவர்லேண்ட்)
சிறந்த இசை (பாடல்): தி மோட்டார் சைக்கிள் டயர்ஸ்.
சிறந்த திரைக்கதை: சைட்வேஸ்
சிறந்த ஒரிஜினல் திரைக்கதை: இட்டர்னல் சன் ஷைன் ஆப் தி ஸ்பாட்லெஸ் மைன்ட்
சிறந்த குறும்படம் (அனிமேஷன்): யான்
சிறந்த குறும்படம் (லைவ் ஆக்ஷன்): வாஸ்ப்
ஒலிப்பதிவு: தி இன்கிரடெபிள்ஸ்
ஒலிக் கலவை: ரே
விஷூவல் எபக்ட்ஸ்: ஸ்பைடர் மேன்-2

Read more about: chennai tamil aviator oscars

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil