For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  வித்தியாசமா செஞ்சாத்தான் கவனிப்பாங்க..... அதான் ஒத்த செருப்பு சைஸ் 7 - இயக்குநர் பார்த்திபன்

  |
  'ஒத்த செருப்பு' Golden Globe Award வாங்கும்-பார்த்திபன் பேச்சு-வீடியோ

  சென்னை: நான் இரண்டு தாலியை கழுத்தில் கட்டியுள்ளேன். ஆனாலும் எனக்கு புருஷன்கிறது பத்திரிக்கையாளர்கள் தான். அவர்கள் தான் செய்யும் புது முயற்சிகளுக்கு ஊக்கம் அளிக்கின்றனர் என்று இயக்குனர் ஆர்.பார்த்திபன் கூறினார்

  ஆர்.பார்த்திபன் என்றாலே புது முயற்சிகளை செய்பவர் என்று அர்த்தம். எதைச் செய்தாலும் அதில் தன்னுடைய தனி முத்திரையை பதித்துவிட்டு செல்வார். அது படமாக இருந்தாலும் சரி அல்லது ஏதாவது விழா மேடையாக இருந்தாலும் சரி வித்தியாசமான கோணத்தில் தன்னுடைய கருத்தை பதிவு செய்துவிட்டு செல்வார்.

  Othe Seruppu Size 7 is international standard movie-Director Bharathiraja

  புதிய பாதையில் தொடங்கிய இவரின் இந்த வித்தியாசமான அணுகுமுறையானது ஹவுஸ்ஃபுல், குடைக்குள் மழை, கதை திரைக்கதை வசனம் இயக்கம், கோடிட்ட இடங்களை நிரப்பவும் என தொடர்ந்து இப்பொழுது ஒத்த செருப்பு வரை தொடர்கிறது.

  இந்தப் படத்தின் டீசர் கடந்த மே மாதம் வெளியிடப்பட்டது. இதைப்பார்த்த நடிகர் ரஜினிகாந்த், சிரஞ்சீவி என பலரும் பாராட்டு தெரிவித்தனர். ஒத்த செருப்பு படத்தை கேள்விப்பட்ட ரஜினிகாந்த், இது ஒரு வித்தியாசமான முயற்சி, ஒரே ஆள் படம் முழுவதும் வருவது என்பது மிகவும் வித்தியாசமான முயற்சி. கடந்த 1960ஆம் ஆண்டில் மறைந்த சுனில் தத் இதே போல் ஒரு படத்தை எடுத்தார். அந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

  இத்தனை ஆண்டுகளுக்கு பின்பு நண்பர் பார்த்திபன் தென் இந்தியாவில் முதன் முறையாக இந்தப் படத்தை எடுக்கிறார். அதோடு அவரே கதை எழுதி இயக்கி நடித்து தயாரித்துள்ளார். இது உண்மையிலேயே நமக்கு பெருமையான விஷயம். உலகத்திலேயே முதன்முறையாகும். இதற்காக அவருக்கு மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

  இந்தப் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடந்தது. இதில் இயக்குநர் இமயம் பாரதிராஜா, இயக்குநர் கே.பாக்யராஜ், சமுத்திரக்கனி, ஒளிப்பதிவாளர் ராம்ஜி, இணை இயக்குநர் சாமி உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

  அதோடு இந்தப் படத்தை ஆசியன் புக்ஸ் ஆஃப் ரிகார்ட்ஸும், இந்தியன் புக்ஸ் ஆஃப் ரிகார்ட்ஸும் பதிவு செய்தன. இதற்கான சான்றிதழையும், மெடலையும் இயக்குநர் பாரதிராஜாவும், இயக்குநர் பாக்யராஜும் இயக்குநரும் நடிகருமான ஆர்.பார்த்திபனுக்கு வழங்கினர்.

  இந்தப் படத்தைப்பற்றி பேசிய இயக்குநர் சமுத்திரக்கனி, இயக்குநர் பார்த்திபன், சினிமாவில் சம்பாதித்தை சினிமாவிலேயே முதலீடு செய்து புதிய முயற்சிகளை செய்து வருகிறார். இந்தப் படமும் அந்த வகையைச் சேர்ந்தது தான். இந்த முறை அசுரத்தனமான படைப்பை கொடுத்துள்ளார். இப்படம் நிச்சயம் ஜெயிக்கவேண்டும் என்று பேசினார்.

  Othe Seruppu Size 7 is international standard movie-Director Bharathiraja

  இயக்குநர் பாரதிராஜா பேசும்பொழுது, அனைவரும் தங்கள் படத்தை உலகத்தரமான படம் என்று பேச்சுக்கு சொல்வார்கள். ஆனால் இதுதான் உண்மையிலேயே உலகத் தரம் என்றால் என்னவென்று இந்தப் படம் தான் சிறந்த உதாரணம். இவர் இருக்கவேண்டிய இடம் இதுவல்ல. இவருக்கு இன்னும் சரியான அங்கீகாரத்தை தமிழ் சினிமா அளிக்காதது வருத்தமளிக்கிறது என்று கூறினார்.

  இறுதியில் பேசிய பார்த்திபன், நான் இரண்டு தாலி கட்டியிருக்கேன். ரெண்டு தாலி கட்டி இருக்கும் எனக்கு புருஷன் பத்திரிக்கையாளர்கள் தான். காரணம் அவர்கள் தான் என்னுடைய ஒவ்வொரு படத்தையும் பெருமைப்படுத்துவதும், கவுரவப்படுத்துவதும் பத்திரிக்கையாளர்கள் தான்,

  அஜீத், விஜய் படம் என்றால் மிக எளிதாக வியாபாரம் ஆகிவிடும். ஆனால் என்னை மாதிரியான ஆட்கள் வித்தியாசமாக எதையாவது செய்தால்தான் ஜெயிக்க முடியும், வியாபாரமும் ஆகும். அதனால் தான் எதையாவது வித்தியாசமாக கொடுக்கவேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளேன். அதனால் தான் இந்த மாதிரி புது முயற்சிகனை செய்து வருகிறேன் என்று கூறினார்.

  English summary
  Othe Seruppu Size 7 press meet in Chennai on Thursday. Director R.Parthiban said, I have wears two Thali in my neck, but journalists are my husband. Because of they are the inspiration and encouragement of my new ventures.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X