»   »  ஓவியா விஷயத்தில் உண்மையில் நடந்தது என்ன?: கமலிடம் சொன்ன ஆரவ்

ஓவியா விஷயத்தில் உண்மையில் நடந்தது என்ன?: கமலிடம் சொன்ன ஆரவ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஓவியாவுக்கு ஆதரவாக இருந்து பல அறிவுரைகளை வழங்கியவன் நான் தான் என்று ஆரவ் கமல் ஹாஸனிடம் தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று ஆரவின் குறும்படம் போட்டு காட்டப்பட்டது. அதன் மூலம் ஆரவ் பொய் சொன்னது தெரிய வந்தது. முதலில் ஆரவ் தனது பொய்யை ஒப்புக் கொள்ளவில்லை.

பின்னர் ஒரு வழியாக வழிக்கு வந்தார். முன்னதாக ஆரவ் கூறியதாவது,

பணம்

பணம்

பணம் மற்றும் பெண் விஷயத்தில் கெட்டப் பெயர் வாங்கக் கூடாது என்று நினைப்பவன் நான். அப்படி தான் வளர்ந்திருக்கிறேன் நான். எவ்வளவோ பிரச்சனை நடந்தபோது நான் ஓவியாவுக்கு ஆதரவாக இருந்துள்ளேன்.

ஓவியா

ஓவியா

ஓவியாவுக்கு எவ்வளவோ அறிவுரை வழங்கியுள்ளேன். அது வெளியே தெரிந்ததா என்று தெரியவில்லை. பிரச்சனைகளை கண்டுகொள்ளாமல் இரு என்று ஓவியாவிடம் தெரிவித்தவன் நான்.

பிரச்சனை

பிரச்சனை

ஒருத்தரிடம் பேசினால் தான் பிரச்சனை வருகிறது என்றால் அவரிடம் பேசாதே என்று ஓவியாவுக்கு பல அட்வைஸ் கொடுத்திருக்கிறேன். அதை காட்டினார்களா என்பது சத்தியமாக தெரியவில்லை.

கடைசி வாரம்

கடைசி வாரம்

கடைசி வாரத்தில் நான் பேசாமல் இருந்து அவாய்ட் பண்ண ஆரம்பித்ததை மட்டும் பெரிதாக காட்டியுள்ளார்கள். என்னால் தான் ஓவியா வெளியே போனாள் என்று ப்ரொஜெக்ட் செய்யப்பட்டது. அவள் ஒரு பெண் என்பதால் வெளியே போகும்போது அவளின் பெயர் கெடக் கூடாது என்று நானும் எதுவும் சொல்லவில்லை என்றார் ஆரவ்.

English summary
Aarav said that it was him who supported Oviya to a great extent when she was in the Big Boss house.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil