»   »  ஓவியா படத்தோட டைட்டிலை பார்த்தீங்களா..? ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

ஓவியா படத்தோட டைட்டிலை பார்த்தீங்களா..? ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

Posted By:
Subscribe to Oneindia Tamil
ஓவியா நடிக்கும் படத்தின் ஃபர்ட்ஸ் லுக் மற்றும் தலைப்பு இதுதான்..!!

சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிம்பு இசையமைத்த பாடல் ஒன்றை ஓவியா பாடியது அனைவருக்கும் நினைவிருக்கும். இந்த நிலையில் தற்போது முதல்முறையாக இருவரும் இணைந்து ஒரு படத்தில் பணிபுரிகின்றனர்.

'காஞ்சனா 3' படத்தில் நடித்து வரும் ஓவியா தற்போது '90ml' என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை அனிதா உதீப் எனும் பெண் இயக்குநர் இயக்கவுள்ளார்.

இந்தப் படத்திற்கு சிம்பு இசையமைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. '90 ml' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.

ஓவியா

ஓவியா

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ஓவியாவின் சினிமா மார்க்கெட் பல மடங்கு உயர்ந்து விட்டது. ஓவியா தற்போது ராகவா லாரன்ஸின் 'காஞ்சனா 3', 'ஓவியாவை விட்டா யாரு', 'சீனி', விஷ்ணு விஷாலின் 'சிலுக்குவார்பட்டி சிங்கம்', விமலுடன் இணைந்து 'களவாணி 2' ஆகிய படங்களில் ஒப்பந்தம் ஆகி நடித்து வருகிறார்.

90 ml

90 ml

இந்நிலையில் ஹீரோ இல்லாமல், ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் படம் ஓவியா நடிக்கிறார் என்றும் மேலும் படத்துக்கு சிம்பு இசையமைக்கிறார் போன்ற செய்திகள் வெளிவந்தன. நேற்று காதலர் தினத்தன்று இப்படத்தினை பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பே வந்துள்ளது.

ஓவியா ஹீரோயின்

ஓவியா ஹீரோயின்

மாயாஜால் மல்டிபிளக்ஸ் உரிமையாளர் அனிதா உதீப் தயாரித்து இயக்கும் இந்தப் படத்தில் ஓவியா ஹீரோயினாக நடிக்கிறார். இவர் இதற்கு முன் 'குளிர் 100 டிகிரி' என்ற படத்தை இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபர்ஸ்ட் லுக்

ஃபர்ஸ்ட் லுக்

இப்படத்திற்கு 90 மில்லி என்று பெயர் வைத்துள்ளனர். ஓவியா டீக்கடையில் டீ குடிப்பது போன்ற ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு சிம்பு தான் இசையமைக்கிறாராம். அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார். எடிட்டராக ஆன்டனி பணியாற்றுகிறார்.

ஓவியா ஆர்மி குஷி

ஓவியா ஆர்மி குஷி

சந்தானம் நடித்த, 'சக்க போடு போடு ராஜா' படத்துக்கு முதன்முறையாக இசையமைத்த சிம்பு தற்போது ஓவியா நடிக்கும் படத்துக்கு இசையமைக்கிறார். இரண்டு பாடல்களுக்கு சிம்பு கம்போசிங் முடித்துவிட்டார் என்று கூறப்படுகிறது. நயன்தாரா போல ஓவியாவும் ஹீரோயினை மையப்படுத்தும் படத்தில் நடிப்பதால் ஓவியா ஆர்மியினர் குஷி ஆகியுள்ளனர்.

English summary
Oviya plays lead role in the movie '90 ml' directed by Anita udeep. Simbu composes music for this movie. Oviya's '90 ml' first look poster was released yesterday.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil