»   »  காயத்ரி, சக்தி, ஜூலியை ஒண்ணும் செஞ்சிடாதீங்க! - ஓவியாவின் வேண்டுகோள் இது

காயத்ரி, சக்தி, ஜூலியை ஒண்ணும் செஞ்சிடாதீங்க! - ஓவியாவின் வேண்டுகோள் இது

Posted By:
Subscribe to Oneindia Tamil

பிக் பாஸ் வீட்டில் ஓவியா இருந்தவரை அவரை எப்படியெல்லாம் ஒதுக்கி வைக்க முடியுமோ அந்த அளவுக்கு ஒதுக்கினர் காயத்ரி, சக்தி, ஜூலி உள்ளிட்டோர். இவர்கள் மீது பார்வையாளர்கள் காட்டிய வெறுப்பு கொஞ்சமல்ல... வெறுப்பின் உச்சம்.

வெளியில் தலை காட்ட முடியாத அளவுக்கு வெறுப்பைச் சம்பாதித்து வைத்துள்ளனர் இந்த மூவரும். ரசிகர்கள் கண்களில் படாமல்தான் உள்ளனர் சக்தியும் ஜூலியும். இந்த வாரம் வெளிவரவிருக்கும் காயத்ரியும் அப்படித்தான் இருக்க வேண்டி வரும்.

இந்த நிலையில், ஓவியா தன் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தண்டனை

தண்டனை

அதில், "அந்த நிகழ்ச்சியில் என்னை மற்றவர்கள் ஒதுக்கியபோது நான் எப்படி மனதளவில் பாதிக்கப்பட்டேனோ, அந்த நிலைதான் இப்போது அவர்களுக்கும் ஏற்பட்டுள்ளது. நான் பிக் பாஸ் வீட்டுக்குள் கஷ்டப்பட்டேன். ஆனால் வெளியில் வந்த பிறகும் அவர்கள் கஷ்டப்படுகிறார்கள்.

போதும் விட்ருங்க

போதும் விட்ருங்க

இதற்கு மேல் அவர்கள் மீது மோசமான கருத்துக்களை முன்வைக்காதீர்கள். அது எனக்கு கஷ்டமாக உள்ளது.

மனிதர்கள் அப்படித்தான்

மனிதர்கள் அப்படித்தான்

தவறு எல்லோரும் தான் செய்கிறோம். யாரும் இங்கு சரியாக இல்லை, நான் உள்பட. தவறு செய்தால்தான் மனிதர்கள், இல்லையெனில் அவர்கள் மனிதர்கள் இல்லை.

மன்னிப்பு

மன்னிப்பு

கொலை, கற்பழிப்பு குற்றவாளிகளை கூட அரசாங்கமே மன்னித்து விடுகிறது. எனவே, பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடந்தவை எல்லாம் ஒரு பெரிய விஷயம் இல்லை. அவர்களுக்கு தொல்லை தரவேண்டாம்.

அன்பு

அன்பு

நீங்கள் என் மீது வைத்துள்ள அன்பு எனக்கு புரிகிறது. ஆனால், மற்றவர்களை கஷ்டப்படுத்தி என்னிடம் அன்பு காட்ட வேண்டாம். அது அவப் பெயரைத்தான் தரும்," என்றார்.

English summary
Actress Oviya has requested her fans not to attack her co participants of Big Boss Juli, Shakthi and Gayathri.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil