»   »  குறையாத மன அழுத்தம்... நட்சத்திர ஹோட்டலில் ஓவியா... 'போதும் வெளிய வந்துடும்மா'!

குறையாத மன அழுத்தம்... நட்சத்திர ஹோட்டலில் ஓவியா... 'போதும் வெளிய வந்துடும்மா'!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பிக் பாஸ் வீட்டில் மற்ற பங்கேற்பாளர்கள் தந்த குடைச்சல் மற்றும் ஆரவ் காதலித்து ஏமாற்றியதன் காரணமாக மிகுந்த மன அழுத்தத்துக்கு உள்ளாகியுள்ளார் ஓவியா.

நீச்சல் குளத்தில் மூழ்கி தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு ஓவியா போய்விட்டதால், விஷயம் போலீஸ் விசாரணை அளவுக்குப் போய்விட்டது.

கவுன்சலிங்

கவுன்சலிங்

ஓவியாவின் இந்த மன அழுத்தத்தைப் போக்க, அவருக்கு மனோதத்துவ நிபுணர்கள் சிகிச்சை எல்லாம் அளித்துப் பார்த்துவிட்டார்கள். ஆனால் அவர்களின் கவுன்சலிங்கால் ஓவியாவை இயல்பு நிலைக்குக் கொண்டு வர முடியவில்லை.

நட்சத்திர ஹோட்டலில்

நட்சத்திர ஹோட்டலில்

எனவே பிக் பாஸ் வீட்டிலிருந்து ஒரு நட்சத்திர ஹோட்டலில் ஓவியா தங்க வைக்கப்பட்டுள்ளார். வெளியில் வந்த பிறகு ஓரளவு இயல்பாக அவர் இருப்பதாக சேனல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கமலுடன்

கமலுடன்

இன்று மாலை பிக் பாஸ் குடும்பத்தினரைச் சந்திக்கும் கமல் ஹாஸன், ஓவியாவையும் சந்திக்கப் போகிறார். அவரிடம் தன்னால் பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்க முடியாது என ஓவியா சொல்வார் என்கிறார்கள்.

ஓவியா ஆர்மி

ஓவியா ஆர்மி

இதற்கிடையே ஓவியா ஆர்மி மற்றும் ஓவியா ரசிகர்கள், தங்கள் அபிமான நடிகை அந்த பெரிய வீட்டுக்குள் பட்ட துன்பங்கள் போதும், வெளிய வந்தால் பெரிய பெரிய பட வாய்ப்புகள் காத்திருக்கு.. வந்துடும்மா என கண்ணீருடன் கருத்துப் பதிவு செய்து வருகிறார்கள்.

English summary
Sources say that Big Boss key participant Oviya is in big depression and now staying in a five star hotel

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil