»   »  பிக் பாஸ் வீட்டில் இருந்து கிளம்புகிறாரா ஓவியா?: காரணம்....

பிக் பாஸ் வீட்டில் இருந்து கிளம்புகிறாரா ஓவியா?: காரணம்....

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருந்து தன்னை வெளியே அனுப்புமாறு ஓவியா கேட்டுள்ளாராம்.

பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களில் ஓவியாவுக்கு தான் பார்வையாளர்கள் மத்தியில் அதிக ஆதரவு உள்ளது. ஓவியா ஆர்மி, அகில இந்திய ஓவியா பேரவை துவங்கும் அளவுக்கு சென்றுவிட்டனர் ரசிகர்கள்.

இந்நிலையில் புது குண்டை தூக்கிப் போட்டுள்ளார் ஓவியா.

ஓவியா

ஓவியா

ஓவியாவுக்கு பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே போக வேண்டுமாம். உடல்நலம் சரியில்லை என்னை வெளியே அனுப்புங்கள் என்று அவர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறாராம்.

பிந்து மாதவி

பிந்து மாதவி

ஓவியா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற அடம்பிடிப்பதால் அவரை அனுப்ப முடிவு செய்துள்ளார்களாம். இந்நிலையில் தான் பிந்து மாதவி பிக் பாஸ் வீட்டிற்கு வந்துள்ளார்.

ஸ்ரீ

ஸ்ரீ

முன்னதாக ஸ்ரீ உடல்நலக் குறைவு காரணமாக பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இந்நிலையில் ஓவியாவும் தன் வீட்டிற்கு செல்லத் துடிக்கிறார்.

ரசிகர்கள்

ரசிகர்கள்

இந்த வாரம் ஓவியாவை வெளியே அனுப்ப போட்டியாளர்கள் நாமினேட் செய்துள்ளனர். அதை பார்த்த ரசிகர்களோ ஓவியா சென்றுவிட்டால் நாங்கள் பிக் பாஸை பார்க்க மாட்டோம் என்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

டிஆர்பி

டிஆர்பி

பிக் பாஸுக்கு டிஆர்பி ரொம்ப முக்கியமாச்சே. இந்நிலையில் ஓவியா கிளம்பிச் சென்றுவிட்டால் டிஆர்பி பாதிக்கப்படும். அதனால் ஓவியாவை பிக் பாஸ் வெளியேற்றுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

English summary
Buzz is that Oviya is keen in getting herself out of the Big Boss. She has cited health reasons to get out of the reality show.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X