»   »  திரும்பி வர ஆசைப்படும் ஓவியா: இது இதைத்தானே எதிர்பார்த்தார் பிக் பாஸ்

திரும்பி வர ஆசைப்படும் ஓவியா: இது இதைத்தானே எதிர்பார்த்தார் பிக் பாஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil
பிக் பாஸ் ஓவியாவுக்கு வந்த ஆசைய பாருங்க-வீடியோ

சென்னை: பிக் பாஸ் வீட்டிற்கு திரும்பி வர ஆசைப்படுகிறாராம் ஓவியா.

பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கிய முதல் சில நாட்கள் மட்டுமே ஜூலிக்காக ஓடியது. அதன் பிறகு ஓவியாவுக்காக ஓடியது. ஓவியா ஆர்மிக்காரர்களால் டிஆர்பி எகிறியது.

இந்நிலையில் தான் காதல் தோல்வியால் ஓவியா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

பிக் பாஸ்

பிக் பாஸ்

ஓவியா கிளம்பிய கையோடு பிக் பாஸ் நிகழ்ச்சியின் டிஆர்பி படுத்து தூங்கிவிட்டது. இதையடுத்து ஓவியாவை மீண்டும் அழைத்து வர முயற்சி செய்தும் முடியவில்லை.

சம்பளம்

சம்பளம்

ஒரு நாளுக்கு ரூ. 5 லட்சம் சம்பளம் தருகிறோம் என்று கூட பிக் பாஸ் ஏற்பாட்டாளர்கள் ஓவியாவிடம் கூறினார்கள். ஆனால் அவரோ நான் திரும்பி வர மாட்டேன் என்று கறாராக கூறிவிட்டார்.

ஓவியா

ஓவியா

ஓவியா வரவே மாட்டார் என்று பிக் பாஸ் முடிவு செய்த நிலையில் ஒரு அதிசயம் நடந்துள்ளது. நிகழ்ச்சியின் 100வது நாள் மட்டும் பிக் பாஸ் வீட்டிற்கு வர ஓவியா ஆசைப்படுகிறாராம்.

100

100

பிக் பாஸ் வீட்டிற்கு வர அனுமதி அளிக்குமாறு ஓவியா கேட்டுள்ளாராம். அவர் வந்தால் 100வது நாள் களைகட்டும் என்பதால் நிச்சயம் அனுமதி அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

தலைவி ஓவியா மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வர விரும்பும் செய்தி அறிந்த ஓவியா ஆர்மிக்காரர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தலைவியை டிவியில் பார்க்க தற்போதே தயாராகுகிறார்கள்.

English summary
Buzz is that actress Oviya is interested in coming to the Bigg Boss house on the 100th day.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil