Just In
- 1 hr ago
அடுத்த மாதம் ரிலீசாகிறது சுனைனாவின் ’ட்ரிப்’.. சன் டிவி யூடியூபில் வெளியான மிரட்டல் டிரைலர்!
- 2 hrs ago
சக போட்டியாளர்கள் மேல் விழுந்த தரம் தாழ்ந்த விமர்சனங்கள்.. முதல் பேட்டியில் ஆரி அர்ஜுனன் நெத்தியடி!
- 2 hrs ago
அது ஹீரோயின்கள் ஏரியாவாச்சே.. மாலத்தீவுக்கு குடும்பத்துடன் விசிட் அடித்த பிரபல ஹீரோ!
- 3 hrs ago
கடைசி நேரத்துல பள்ளிகளை திறக்கக் கூடாது.. ராட்சசி பட இயக்குநர் கெளதம்ராஜின் ஸ்பெஷல் பேட்டி!
Don't Miss!
- News
சீனா என்ற வார்த்தையே மோடியின் வாயில் இருந்து வரவில்லையே.. எங்கே போனது 56 இஞ்ச் மார்பு? ராகுல் கேள்வி
- Sports
இவங்களை ஏன் டீமை விட்டு தூக்குனீங்க? இங்கிலாந்து செய்த சொதப்பல்.. கடுப்பான முன்னாள் வீரர்கள்
- Finance
அமெரிக்காவுக்கு ஜாக்பாட் தான்.. சாம்சங்கின் பிரம்மாண்ட திட்டம்.. எல்லாம் ஜோ பைடனுக்கு சாதகம் தான்!
- Automobiles
ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் உடன் பிரபலமான கியா செல்டோஸ் கார் எப்படி இருக்கும்?! க்ரெட்டாவின் ஆதிக்கத்தை உடைக்குமா?
- Lifestyle
காரசாரமான... சிக்கன் மெஜஸ்டிக் ரெசிபி
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ரஜினியின் 'காலா'வுக்குப் பிறகு.. நடிகர் விஜய்க்கு சூப்பர் ஹீரோ கதை சொன்ன இயக்குனர் பா.ரஞ்சித்!
சென்னை: விஜய்க்கு சூப்பர் ஹீரோ கதை ஒன்றை சொல்லி இருப்பதாக இயக்குனர் பா. ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
தினேஷ் நடித்த அட்டகத்தி படம் மூலம் இயக்குனரானவர், பா.இரஞ்சித். இந்தப் படம் கவனிக்கப்பட்டது.
இதையடுத்து கார்த்தியின் மெட்ராஸ், ரஜினியின் கபாலி, காலா படங்களை இயக்கினார்.

சார்பட்டா பரம்பரை
காலாவைத் தொடர்ந்து பிர்சா முண்டாவின் வாழ்க்கைக் கதையை அவர் படமாக்க இருப்பதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் அவர், சார்பட்டா பரம்பரை என்ற படத்தை இயக்கியுள்ளார். குத்துச் சண்டையை மையமாகக் கொண்ட இதன் கதை, வடசென்னையில் நடந்த உண்மைச் சம்பவம் என்று கூறப்படுகிறது.

குத்துச்சண்டை
இதில், ஹீரோவாக ஆர்யா நடிக்கிறார். மற்றும் கலையரசன், துஷாரா, பசுபதி, சந்தோஷ், ஜான் விஜய், சஞ்சனா நடராஜன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படத்துக்காக, ஆர்யாவும் கலையரசனும் குத்துச் சண்டைப் பயிற்சி பெற்றுள்ளனர். ஜி.முரளி ஒளிப்பதிவு செய்கிறார். கே 9 ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

ஏறி ஆடு கபிலா
இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நேற்று சோசியல் மீடியாவில் பகிர்ந்த பா.இரஞ்சித், இங்க வாய்ப்புன்றது நம்முளுக்கு அவ்ளோ சீக்கிரம் கிடைக்கிறது இல்ல. இது நம்ப ஆட்டம். எதிர்ல நிக்கிறவன் கலகலத்து போவனும்.. ஏறி ஆடு..கபிலா #சார்பட்டா என்று குறிப்பிட்டிருந்தார்.

இரண்டு பரம்பரை
இந்நிலையில், பா.ரஞ்சித் அளித்துள்ள பேட்டியில், விஜய்க்கு கதை சொல்லி இருப்பதாகக் கூறியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது: முன்பு வடசென்னையில் வழக்கத்தில் இருந்த ஆங்கில குத்துச்சண்டைதான் சார்பட்டா படம். இரண்டு
பரம்பரைக்குள் நடக்கும் சண்டையில் யார் ஜெயிப்பார்கள், யார் தோற்பார்கள் என்கிற மோதல்தான் கதை.

தீவிரமான விளையாட்டு
வட சென்னையில் இது தீவிரமான விளையாடப்பட்டு வந்திருக்கிறது. அந்தக் கதையை முழுமையாக இதில் சொல்லிவிட முடியாது. இரண்டரை மணி நேரத்துக்குள் சொல்ல முடிந்ததை சொல்லி இருக்கிறேன். இதில் ஆர்யா, பசுபதி, கலையரசன், துஷாரா ஆகியோர் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

சூப்பர் ஹீரோ கதை
சார்பட்டாவுக்குப் பிறகு பிர்ஸா முண்டா படத்தை முடிக்க வேண்டும். காலா படம் முடிந்ததும் விஜய் சாரை சந்தித்து கதை சொன்னேன். அவருக்கு கதைப் பிடித்திருந்தது. சூப்பர் ஹீரோ கதை அது.. பார்க்கலாம். ரஜினியிடம் அரசியல் குறித்து பேசியிருக்கிறேன். அவருக்கு அரசியலில் ஈடுபட ஆர்வம் இருக்கிறது.