லோகேஷ் இரும்புக்கை மாயாவின்னா.. பா. ரஞ்சித் அதை விட பயங்கரமா சூர்யாவுக்கு ஒரு படம் வச்சிருக்காரே!
சென்னை: நடிகர் சூர்யாவுக்காக தனது கனவு படம் காத்திருப்பதாக இயக்குநர் பா. ரஞ்சித் அளித்த பேட்டி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.
Recommended Video
இயக்குநர் வெற்றிமாறன் சூர்யாவுடன் வாடிவாசல் படம் பண்ண காத்திருக்கிறார். அதே போல இயக்குநர் லோகேஷ் கனகராஜின் கனவு படமான இரும்புக்கை மாயாவி படத்தில் சூர்யா தான் சரியான தேர்வு என்று பேட்டிகளில் கூறியுள்ளார்.
இந்நிலையில், இயக்குநர் பா. ரஞ்சித் சூர்யாவுக்காக தான் எழுதி வைத்திருக்கும் கனவு படம் பற்றி பேசியிருப்பது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

உச்சத்தில் சூர்யா
தனது பெயரை போலவே தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கிறார் நடிகர் சூர்யா. சூரரைப் போற்று மற்றும் ஜெய்பீம் என அடுத்தடுத்து வெளியான இரு படங்களும் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளன. இயக்குநர் பாலாவின் வணங்கான் இன்னும் என்ன மேஜிக் செய்ய காத்திருக்கிறதோ என எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், சிறுத்தை சிவாவுடன் பிரம்மாண்ட படத்தில் கை கோர்த்துள்ளார் சூர்யா.

வாடிவாசல் மிரட்டும்
விடுதலை படத்தை இயக்குநர் வெற்றிமாறன் இரண்டு பாகங்களாக எடுத்து வருவதாலே தாமதம் ஏற்பட்டுள்ளது என்றும், வாடிவாசல் படத்துக்காக காளை பயிற்சியும் மேற்கொள்ள வேண்டிய நிலையில், சூர்யா 42 படத்தை முடித்ததும் வாடிவாசல் படம் ஆரம்பமாகும் என்றும் அந்த படம் எப்போது வந்தாலும் மிரட்டும் என சூர்யா ரசிகர்கள் உறுதியாக உள்ளனர்.

இரும்புக்கை மாயாவி
கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் கடைசியில் சில நிமிடங்களே ரோலெக்ஸ் கதாபாத்திரத்தில் வந்து ஒட்டுமொத்த தியேட்டரையும் தெறிக்க விட்டார் நடிகர் சூர்யா. இந்நிலையில், சூர்யாவை வைத்து தனது கனவுத் திரைப்படமான இரும்புக்கை மாயாவி படத்தை நிச்சயம் இயக்குவேன் அந்த படம் டிசி பட ஸ்டைலில் சூப்பர் ஹீரோ படமாக இருக்கும் என கூறியுள்ளார்.

பா. ரஞ்சித்தின் ஜெர்மன்
இந்நிலையில், நட்சத்திரம் நகர்கிறது படத்தின் புரமோஷனில் பிசியாக இருக்கும் இயக்குநர் பா. ரஞ்சித் சூர்யாவை வைத்து தனது கனவு படமான ‘ஜெர்மன்' படத்தை இயக்கப் போவதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். மேட்மேக்ஸ் ஃப்யூரி, டூன், பிளேட் ரன்னர் போன்ற ஹாலிவுட் படங்களை போல இந்த படம் வித்தியாசமான யூனிவர்ஸில் பயணிக்கும் என்றும் தனது பேட்டியில் கூறியுள்ளார். இப்படி தமிழ் சினிமாவின் பல முன்னணி இயக்குநர்கள் தங்கள் கனவு படங்களை சூர்யாவை வைத்து இயக்க காத்துக் கொண்டிருப்பது சூர்யா ரசிகர்களை கொண்டாட்ட மோடுக்கே கொண்டு சென்றுள்ளது.

விக்ரம் படத்தை தொடர்ந்தா
பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி உள்ள நட்சத்திரம் நகர்கிறது திரைப்படம் அடுத்த வாரம் திரைக்கு வரவுள்ள நிலையில், அடுத்ததாக சியான் விக்ரமை வைத்து கேஜிஎஃப் கதையில் பிரம்மாண்டமாக ஒரு படத்தை இயக்கி வருகிறார் பா. ரஞ்சித். அந்த படத்தை முடித்ததும் அடுத்து அம்பேத்கர் வாழ்க்கை வரலாற்று படத்தை எடுக்கப் போகிறாராம். அதன் பிறகு சூர்யாவுடன் இணைந்து ஜெர்மன் படத்தை இயக்குவாரா? என ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











