»   »  'அவங்க அவ்வளவுதான்!'- விமர்சகர்களுக்கு இயக்குநர் ரஞ்சித்தின் கூல் பதிலடி

'அவங்க அவ்வளவுதான்!'- விமர்சகர்களுக்கு இயக்குநர் ரஞ்சித்தின் கூல் பதிலடி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கபாலி படம், ரஜினி மீதான விமர்சனங்கள் மற்றும் தன்னைப் பற்றி வரும் சாதி ரீதியான விமர்சனங்கள் குறித்து கேட்டதற்கு 'அவங்க அவ்வளவுதான், விடுங்க' என்று கூலாக பதில் கூறியுள்ளார் இயக்குநர் பா ரஞ்சித்.

ரஜினிகாந்த் நடித்துள்ள கபாலி படம் வரும் ஜூலை 15-ம் தேதி உலகெங்கும் பிரமாண்டமாய், இதுவரை எந்த இந்தியப் படமும் வெளியாகாத அளவுக்கு அதிக திரையரங்குகளில் ரிலீசாகிறது.


Pa Ranjith's comment on haters

இந்தப் படத்தின் டீசர்கள், பாடல்கள் இணையத்தைக் கலக்கிக் கொண்டிருக்கின்றன. ரசிகர்கள் கொண்டாடி வருகின்றன.


ஆனால் இன்னொரு பக்கம் இந்தப் படம் குறித்து எதிர்மறையாகவும் விஷமத்தனமாகவும் சிலர் கருத்து சொல்லி வருகின்றனர்.


குறிப்பாக ரஜினியையும் இயக்குநர் பா ரஞ்சித்தையும் பற்றி தேவையற்றதை சிலர் சமூக வலைத் தளங்களில் எழுதுவதும் அவற்றுக்கு ரஜினி ரசிகர்கள் பதிலடி கொடுப்பதும் தொடர்கிறது.


ரஞ்சித்தை ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவராகக் காட்டி, கபாலியை அவர்களுக்கான படம் என முத்திரை குத்த முயற்சித்து வருகின்றனர். ரஜினியையும் தொடர்ந்து அவதூறாகப் பேசி வருகின்றனர். கபாலி பாடல்களில் ஆண்டைகள் என்ற சொல் இடம்பெற்றதை சில சாதி வெறியர்கள் கண்டித்து எழுதியுள்ளனர்.


நேற்று ஒரு படத்தின் செய்தியாளர் சந்திப்புக்கு இயக்குநர் பா ரஞ்சித் வந்திருந்தார். அவரிடம் இதுகுறித்தெல்லாம் கேள்வி கேட்டபோது, மாறாத புன்முறுவலோடு, "அவங்க அவ்வளவுதான்... விடுங்க சார்" என்றார் கூலாக.


எத்தனை பெரிய மன நெருக்கடியாக இருந்தாலும் காட்டிக் கொள்ளாமல், புன்னகையுடன் கடந்து செல்லப் பழகியிருக்கிறார் ரஞ்சித்.

English summary
Rajinikanth's Kabali director Pa Ranjith coolly crossed his haters negative comments and say, "just leave them. That is their level."

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil