»   »  'உங்கள வெரட்டி வெளுக்கத்தான் இந்தப் போராட்டம்..' - வைரலாகும் பா.விஜய் வீடியோ!

'உங்கள வெரட்டி வெளுக்கத்தான் இந்தப் போராட்டம்..' - வைரலாகும் பா.விஜய் வீடியோ!

Posted By:
Subscribe to Oneindia Tamil
காவிரி விவகாரம் தொடர்பாக, பாடலாசிரியர் பா.விஜய் வைரலாகும் வீடியோ!

சென்னை : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுக்க தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. விவசாயிகளுக்காக அனைவரும் கைகோர்த்து போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தும் போராட்டத்தில் திரையுலகினரும் இணைந்துள்ளனர். நேற்று முன் தினம் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் செய்த நடிகர்கள், இயக்குநர்கள் பலர் கைது செய்யப்பட்டனர்.

Pa.Vijay poetry on cauvery issue

இந்நிலையில், நடிகரும், பாடலாசிரியருமான பா.விஜய் இந்த விவகாரம் பற்றி தனது ஸ்டைலில் கவிதை ஒன்றை எழுதி, தானே அதைப் பாடி ட்விட்டர் பக்கத்தில் வீடியோவாகப் பதிவிட்டுள்ளார்.

காவிரி விவகாரம் தொடர்பாக, பாடலாசிரியர் பா.விஜய் எழுதிய கவிதை வருமாறு...

"தறிகெட்டுப்போன நாட்டுக்கு எதுக்குடா கிரிக்கெட்டு..

மொதல்ல தரங்கெட்டுப்போன அதிகார வர்க்கத்த சரிகட்டு..!

சே..சேன்னு கூட்டம் மெதப்புல மெதக்கலாம் சேப்பாக்கம்..

அத செங்கல் செங்கலா எங்க கூட்டாம் தூள் தூளாக்கும்..!

கடற்கரை ஓரத்தை பூட்டி வச்சுப்புட்டியே காவலாளி..

புயல் காத்துக்கு பூட்டு போட்டவன் எவண்டா புத்திசாலி..!

ஆட்டம் நடக்கட்டும் மட்டைய தூக்கி அடிப்பாய்ங்க..

எங்க பசங்க ஒரு நாள் பாராளுமன்றத்தையே புடிப்பாய்ங்க..!

விளம்பரத்துல தன்னையே வித்தவனை எல்லாம் வீரன்ற..

தேச எல்லையில செத்த எத்தன பேருக்கு இது தேவன்ற..?

ஒரே இந்தியா ஒரே ரத்தமுனு கூவுறியே..

அட காவிரிக்கு மட்டும் கட்டத்த மாத்தி தாவுறியே..!

ஆவட்டும் சாரே, ஆனவரைக்கும் ஊரை ஏமாத்து..

எங்க பச்சத்தமிழனுக்கு புரிஞ்சுபோச்சு ஒம் பம்மாத்து..!

காவிரி எங்க கரிகாலனால தாண்டா ஆறாச்சு..

எங்க தொண்டைய மெறிச்சு தொண்டுனு சொல்லுற வாய் சேறாச்சு..!

காவிரில பல பேர் கால் கழுவ மட்டும்தான், கால் வச்சான்..

அப்படி வீணான தண்ணியில விவசாயத் தமிழன்தான் நெல் வச்சான்..!

பால் குடிச்ச சிசுவோட கழுத்த நெறிச்ச பேய்க்கூட்டம்..

உங்கள வெரட்டி அடிச்சு, வெளுக்கத்தாண்டா இந்தப் போராட்டம்..!

தறிகெட்டுப்போன நாட்டுக்கு எதுக்குடா கிரிக்கெட்டு..

மொதல்ல தரங்கெட்டுப்போன அதிகார வர்க்கத்த சரிகட்டு..!"

இவ்வாறு எழுதிப் பாடியிருக்கிறார் பா.விஜய். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

English summary
Lyricist Pa.Vijay posted a video of Poetry on Cauvery protest.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X