மீண்டும் பேய் படத்தில் நடிக்கும் பிரபுதேவா... டைரக்டர் யார் தெரியுமா
சென்னை : பிரபுதேவா வரிசையாக பல படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் தான் பிரபுதேவா நடிக்கும் 54 வது படத்தின் ஃபஸ்ட்லுக் டைட்டிலுடன் வெளியிடப்பட்டது. இந்த படத்திற்கு பொய்க்கால் குதிரை என பெயரிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே பகீரா, பொன்மாணிக்கவேல் உள்ளிட்ட சில படங்களில் பிரபுதேவா நடித்து வருகிறார். அத்துடன் குலேபகாவலி டைரக்டர் கல்யாண் இயக்கும் பெயரிடப்படாத படத்திலும் நடிக்கிறார். இந்த படத்தின் ஷுட்டிங் 2 நாட்களுக்கு முன்பு தான் புதுச்சேரியில் துவங்கப்பட்டது. இந்த படத்தில் பிரபுதேவாவிற்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்.

பேய் படம் இயக்கும் பா.விஜய்
இதைத் தொடர்ந்து பிரபுதேவாவை வைத்து பேய் படம் ஒன்றை இயக்க போவதாக பாடலாசிரியர் பா.விஜய் அறிவித்துள்ளார். இவர் ஏற்கனவே ஸ்ட்ராபெர்ரி, ஆருத்ரா ஆகிய படங்களை இயக்கி உள்ளார். தற்போது பிரபுதேவாவை வைத்து இயக்க போகும் படத்திற்கு தானே கதையும் எழுதி வருகிறார். பெயரிடப்படாத இந்த படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது.

பிரபுதேவாவின் ரசிகன்
தொடர்ந்து பேசிய பா.விஜய், உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது தான் இந்த படம். இது கிரைம், த்ரில்லர் உடனான பேய் படமாக இருக்கும் . நான் பிரபுதேவாவின் ரசிகன். இந்த படத்திற்கு கதை தயார் செய்த உடன் லீட் ரோலில் நடிக்க ஒரு சில ஹீரோக்கள் தான் என் மனதில் தோன்றினர்.

பிரபுதேவா தான் சரி
அவர்களில் முதலில் நினைவிற்கு வந்தது பிரபுதேவா தான். அவரது மிகப் பெரிய பிளஸ், காமெடி மற்றும் சீரியஸ் ரோல்களில் நடிப்பது தான். இந்த கேரக்டருக்கு அவை தான் தேவை. ஒரு சம்பவத்தால் பாதிக்கப்பட்டவராக நடிக்க உள்ளார். இந்த படத்தில் அவரின் நடிப்பு அனைவருக்கும் பிடிக்கும். இந்த படம் புதிய உணர்வை கொடுக்கும் என்றார்.

பாதி படம் காட்டில் தான்
மிக கடினமான ஒரு லுக்கில் பிரபுதேவா இந்த படத்தில் நடிக்க போகிறார். ரஃப் அன்ட் டஃப் லுக். கதையை கேட்டதுமே புதிய லுக்கிற்கு மாற அவர் தயாராகி விட்டார். அவர் இந்த படத்திற்கு மிகப் பெரிய ப்ளஸ். ஹீரோயினாக மகிமா நம்பியார் நடிக்கிறார். 50 சதவீத படம் காட்டில் தான் எடுக்கப்பட உள்ளது. வனத்துறை அதிகாரியாக மகிமா நடிக்கிறார் என்றார்.

பிரபலமான முகங்கள் தான் தேவை
இவர்களுடன் கலையரசன், தம்பி ராமைய்யா ஆகியோர் முக்கிய ரோல்களில் நடிக்கிறார்களாம். மேலும் சில கேரக்டர்களுக்காக புகழ்பெற்ற பல நடிகர்களிடம் பேசப்பட்டு வருகிறதாம். தில்லுக்கு துட்டு, பிசா 2 உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய தீபக் குமார் பாதே தான் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய உள்ளார்.

பாடல்கள் எப்படி இருக்கும்
ராட்சசன் படத்தில் பணியாற்றிய சான் லோகேஷ் தான் இந்த படத்திற்கும் எடிட் செய்ய உள்ளார். பிரபுதேவா நடிக்கும் பகீரா படத்திற்கு இசையமைக்கும் கணேசன் சேகர் தான் இந்த படத்திற்கும் இசையமைக்க உள்ளார். இந்த படத்தில் மொத்தம் 7 பாடல்களாம். அவற்றில் 6 முழுமையான பாடல்கள், ஒன்று சிறிய பாடல். இந்த பாடல்கள் வழக்கமான டூயட் அல்லது குத்துப்பாட்டு போல இருக்காதாம். கதையோடு கலந்ததாக இருக்குமாம்.

எப்போ ஷுட்டிங்
இந்த படத்தின் ஷுட்டிங் செப்டம்பரில் துவங்கப்பட உள்ளதாம். 3 கட்டமாக படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளார்களாம். அதில் ஒன்று வனப்பகுதியில் நடத்தப்பட உள்ளதாம். அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக சென்னையில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட உள்ளதாம். படத்தின் சிறிய பகுதியை படமாக்க வெளிநாடும் செல்ல உள்ளனராம் படக்குழுவினர்.

வரவேற்பை பெற்ற பிரபுதேவா நடிப்பு
பிரபுதேவா இதற்கு முன் தேவி, தேவி 2 போன்ற பேய் படங்களில் நடித்துள்ளார். அந்த வகையில் தற்போது நடிக்க உள்ளது மூன்றாவது பேய் படமாகும். தேவி, தேவி 2 இரண்டு படங்களிலும் காமெடி கலந்து, சீரியஸ் கேரக்டரில் நடித்த பிரபுதேவாவின் நடிப்பு மிகுந்த வரவேற்பை பெற்றது.


Click it and Unblock the Notifications











