Just In
- 1 hr ago
அடுத்த மாதம் ரிலீசாகிறது சுனைனாவின் ’ட்ரிப்’.. சன் டிவி யூடியூபில் வெளியான மிரட்டல் டிரைலர்!
- 2 hrs ago
சக போட்டியாளர்கள் மேல் விழுந்த தரம் தாழ்ந்த விமர்சனங்கள்.. முதல் பேட்டியில் ஆரி அர்ஜுனன் நெத்தியடி!
- 2 hrs ago
அது ஹீரோயின்கள் ஏரியாவாச்சே.. மாலத்தீவுக்கு குடும்பத்துடன் விசிட் அடித்த பிரபல ஹீரோ!
- 3 hrs ago
கடைசி நேரத்துல பள்ளிகளை திறக்கக் கூடாது.. ராட்சசி பட இயக்குநர் கெளதம்ராஜின் ஸ்பெஷல் பேட்டி!
Don't Miss!
- News
சீனா என்ற வார்த்தையே மோடியின் வாயில் இருந்து வரவில்லையே.. எங்கே போனது 56 இஞ்ச் மார்பு? ராகுல் கேள்வி
- Sports
இவங்களை ஏன் டீமை விட்டு தூக்குனீங்க? இங்கிலாந்து செய்த சொதப்பல்.. கடுப்பான முன்னாள் வீரர்கள்
- Finance
அமெரிக்காவுக்கு ஜாக்பாட் தான்.. சாம்சங்கின் பிரம்மாண்ட திட்டம்.. எல்லாம் ஜோ பைடனுக்கு சாதகம் தான்!
- Automobiles
ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் உடன் பிரபலமான கியா செல்டோஸ் கார் எப்படி இருக்கும்?! க்ரெட்டாவின் ஆதிக்கத்தை உடைக்குமா?
- Lifestyle
காரசாரமான... சிக்கன் மெஜஸ்டிக் ரெசிபி
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
முன்னணி இயக்குனர்களின் ‘பாவக்கதைகள்‘ ..டிசம்பர் 18ல் நெட்பிளிக்ஸில் ரிலீஸ்!
சென்னை: நெட்பிளிக்ஸில் ஒரிஜினல் சினிமா டிசம்பர் மாதம் OTT-யில் வெளியாக இருக்கும் பாவக்கதைகள் படத்தின் டீசரை வெளியிட்டு படத்தை டிசம்பர் 18ந் தேதி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் நேரடியாக காணலாம் என்று அறிவித்துள்ளது.
4 கதைகளை கொண்ட ஆந்தாலஜி படமாக இப்படம் வெளிவருகிறது. வெற்றிமாறன், சுதா கொங்காரா, கவுதம் மேனன், விக்னேஷ் சிவன் போன்ற பிரபல இயக்குனர்கள் இந்த கதைகளை இயக்கி உள்ளனர். கவுதம் மேனன் அவரது பாகத்தில் மட்டும் நடித்துள்ளார்.
வெற்றிமாறனின் கதை ஆணவ கொலைகளை மையமாக வைத்து கதை என்று இணையத்தில் முன்பு சில தகவல்கள் கசிந்தது இதனால் அவரது பாகத்தின் மேல் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்தில் சாய் பல்லவி, சிம்ரன், அஞ்சலி, பிரகாஷ் ராஜ், ஷாந்தனு, பவானி ஸ்ரீ, காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் நடித்துள்ளனர்.

டீசர் வெளியானது
பிரபல இயக்குனர்கள், நடிகர்களை கொண்டுள்ள பாவக்கதைகள் படத்தின் மேல் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டுள்ள நிலையில் நெட்பிளிக்ஸ் தளம் தற்போது டீசரை வெளியிட்டு ரசிர்களுக்கு மகிழ்ச்சியை உண்டாகி உள்ளது. படம் டிசம்பர் 18 அன்று நேரடியாக நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளது. ரசிகர்களின் இந்த எழுச்சியை, இந்த வளர்ச்சியை டெக்னாலஜியை தாண்டி நாம் மதிக்க வேண்டும். நமது நோக்கம் அவர்களுக்கான கதைகளை தொடர்ந்து புதிதாக, வித்தியாசமாக திரை தளத்திலும் டிஜிட்டல் தளத்திலும் உருவாக்கி கொண்டே இருக்க வேண்டும் என்பதாகும்.

தயாராக உள்ளன
இந்நோக்கத்தில் செயல்படும் RSVP Movies நிறுவனம் Love Per Square Foot, Lust Stories, Karwaan, Pihu, Kedarnath, URI - The Surgical Strike, Sonchiriya , Raat akeli hain , the sky is pink and Mard Ko Dard Nahi Hota போன்ற முக்கிய படைப்புகளை உருவாக்கியுள்ளனர். மேலு அவர்களது தயாரிப்பில் Rashmi Rocket , Tejas , Pippa and Sam Maneckshaw போன்ற படைப்புகள் வெளிவர தயாராகவுள்ளது.

முதல் படைப்பு
ஆஷி துவா சாரா தனது சொந்த முயற்சியில் உருவாக்கிய சுதந்திரமாக இயங்கும் நிறுவனம் தான் Flying Unicorn Entertainment ஆகும். ஆஷி துவா சாரா தான் இந்தியாவில் முதன் முதலில் ஆந்தாலஜி படைப்பை, பாலிவுட்டின் முக்கிய ஆளுமைகளான ஜோயா அக்தர், திபாகர் பானர்ஜி, அனுராக் காஷ்யப், மற்றும் கரண் ஜோகர் ஆகியோர் இயக்கத்தில் பாம்பே டாக்கீஸ் மற்றும் லஸ்ட் ஸ்டோரீஸ் ஆகியவற்றை உருவாக்கினார். மேலும் இவர் சஃய்ப் அலிகான் நடிப்பில் உருவான ப்ளாக் காமெடி படமான காலக்காண்டி படத்தை தயாரித்துள்ளார்.

நெட்ஃபிளிக்ஸ்
நெட்ஃபிளிக்ஸ் நிறுவனமானது உலகில் முன்ணனி இணைய ஸ்ட்ரீமிங்க் தளமாகும். 193 மில்லியன் சந்தாதாரர்களுடன் உலகின் 190 நாடுகளில், பல்வேறு மொழிகளில், பலவிதமான வகைகளில் திரைப்படங்கள் இணைய தொடர்கள், டாக்குமெண்ட்ரிகள் ஆகியவற்றை வழங்கி வருகிறது. இதன் சந்தாதாரர்கள் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் இணைய இணைப்பு இருந்தால் எவ்வளவு கதைகளை வேண்டுமானாலும் பார்க்க முடியும். சந்தாதாரர்கள் படத்தை நிறுத்தி, ஃபார்வேட் செய்து, எந்த விளம்பரங்கள் இல்லாமல் தங்கள் விருப்பப்படி பார்க்க முடியும்.