»   »  "சின்ன ஏபிசிடியா... பெரிய ஏபிசிடியா..? - படைவீரன் ட்ரெய்லர் இதோ!

"சின்ன ஏபிசிடியா... பெரிய ஏபிசிடியா..? - படைவீரன் ட்ரெய்லர் இதோ!

Posted By:
Subscribe to Oneindia Tamil
ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருக்கிறது படை வீரன் ட்ரைலர்

சென்னை : மணிரத்தின் உதவியாளர் தனா இயக்கும் படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார் விஜய் யேசுதாஸ்.

விஜய் யேசுதாஸ் நடித்திருக்கும் 'படைவீரன்' திரைப்படம் வரும் வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆக இருக்கிறது.

இந்நிலையில், 'படைவீரன்' படத்தின் ட்ரெய்லர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

விஜய் யேசுதாஸ்

விஜய் யேசுதாஸ்

பிரபல பின்னணி பாடகர் யேசுதாஸின் மகன் விஜய் யேசுதாஸ். இவரும் அவரது தந்தையின் பாதையில் பின்னணி பாடகராகவே சினிமாவில் அறிமுகமானார். தென்னிந்திய மொழிப்படங்களில் பிஸியாக பாடி வருகிறார்.

நடிகர் விஜய் யேசுதாஸ்

நடிகர் விஜய் யேசுதாஸ்

இந்நிலையில், 2010-ல் அவன் என்ற மலையாள படத்தில் ஒரு கேரக்டரில் நடித்த விஜய் யேசுதாஸ், 2015-ல் தமிழில் தனுஷ் நடித்த மாரி படத்தில் வில்லனாக ஒரு நெகட்டிவ் போலீஸ் வேடத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு வந்த சில நெகட்டிவ் வேடங்களை அவர் ஏற்கவில்லை.

படைவீரன்

படைவீரன்

இப்போது மணிரத்னத்தின் உதவியாளர் தனா இயக்கும் படைவீரன் என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார் விஜய் யேசுதாஸ். இயக்குநர் பாரதிராஜா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்தில் புதுமுகம் அம்ரிதா கதாநாயகியாக நடிக்கிறார்.

தனுஷ் பாடியுள்ளார்

தனுஷ் பாடியுள்ளார்

ஒளிப்பதிவாளர் ராஜவேல் மோகன் ஒளிப்பதிவு செய்ய, கார்த்திக் ராஜா இசையமைக்கிறார். மேலும், அகில், கலையரசன், இயக்குநர்கள் விஜய்பாலாஜி, மனோஜ் குமார், உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். கார்த்திக் ராஜா இசையில் நடிகர் தனுஷ் ஒரு பாடலைப் பாடியுள்ளார்.

படைவீரன் ட்ரெய்லர்

'படைவீரன்' படம் வரும் பிப்ரவரி 2-ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், படத்தின் ட்ரெய்லர் நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருக்கிறது இந்த ட்ரெய்லர்.

English summary
Vijay yesudas, Bharathi raja starrring 'Padaiveeran' trailer released officially.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil