முதல்ல இங்க.. அப்புறம்தான் அங்க.. பத்மாவதி படம் பிரிட்டனில் ரிலிஸாவது குறித்து தயாரிப்பாளர்!

பத்மாவதி திரைப்படம் இந்தியாவில் ரிலிஸாகமால் பிரிட்டனில் ரிலிஸாகாது என தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மும்பை: பத்மாவதி திரைப்படம் இந்தியாவில் ரிலிஸாகமால் பிரிட்டனில் ரிலிஸாகாது என தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சஞ்ஜய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோன் நடிப்பில் 190 கோடி ரூபாய் செலவில் உருவாகியிருக்கும் படம் பத்மாவதி. ராஜஸ்தான் மாநிலம் சித்தூரை ஆண்ட ராணி பத்மினி வாழ்க்கையை மையமாக வைத்து இந்தப்படம் உருவாகியுள்ளது.

ராஜபுத்திர மன்னனை திருமணம் செய்த தீபிகா படுகோன் டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜி மீது காதல் வயப்படுவது போல் படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு ராஜபுத்திர இனத்தவர்களும் இந்து அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

தீபிகா தலைக்கு பரிசு

தீபிகா தலைக்கு பரிசு

மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம், ராஜஸ்தான், அரியானா, குஜராத் ஆகிய மாநிலங்களில் படத்தை வெளியிட எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. இயக்குநர் சஞ்ஜய் லீலா பன்சாலி மற்றும் தீபிகா படுகோனின் தலைக்கு பரிசுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளியாவதில் இழுபறி

வெளியாவதில் இழுபறி

இந்தப் படத்திற்கு இதுவரை சென்சார்போர்டு அனுமதி வழங்கவில்லை. ஏற்கனவே பத்மாவதி படத்திற்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில் இந்தியாவில் இந்தப்படம் வெளியாவதில் இழுபறி நிலவி வருகிறது.

பிரிட்டனில் அனுமதி

பிரிட்டனில் அனுமதி

இந்தியாவிலும் பிரிட்டனிலும் டிசம்பர் ஒன்றாம் தேதி பத்மாவதி படம் ரிலிஸாகும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பிரிட்டனில் இந்தப்படத்தை ரிலிஸ் செய்ய சென்சார் போர்டு அனுமதி வழங்கியுள்ளது.

பிரிட்டனில் டிசம்பர் 1ல்

பிரிட்டனில் டிசம்பர் 1ல்

12ஏ ரேட்டிங்குடன் பிரிட்டன் சென்சார்டு போர்டு பத்மாவதி படத்துக்கு அனுமதி வழங்கியுள்ளது. அதாவது 12 வயதுக்கு குறைவான குழந்தைகள் பார்க்கக்கூடாது. 12 வயது கடந்தவர்கள் மற்றும் அடல்ட்ஸ் பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அறிவித்தப்படி டிசம்பர் ஒன்றாம் தேதி பிரிட்டனில் பத்மாவதி படம் ரிலிஸாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

பிரிட்டனில் ரிலிஸாகாது

பிரிட்டனில் ரிலிஸாகாது

ஆனால் இந்தியாவில் ரிலிஸாகாமல் பத்மாவதி படம் பிரிட்டனில் ரிலிஸாகாது என தயாரிப்பாளர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். இந்தியாவில் பத்மாவதி படத்துக்கான பிரச்சனை தீர்க்கப்படாமல் பிரிட்டனில் ரிலிஸ் ஆகாது என தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X