»   »  சாக்‌ஷி மாலிக்கை கிண்டலடித்த பாக். பத்திரிகையாளர்.. டிவிட்டரில் விளாசித் தள்ளிய அமிதாப் பச்சன்

சாக்‌ஷி மாலிக்கை கிண்டலடித்த பாக். பத்திரிகையாளர்.. டிவிட்டரில் விளாசித் தள்ளிய அமிதாப் பச்சன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: மல்யுத்தப் போட்டியில் சாக்‌ஷி மாலிக் வெண்கலப் பதக்கம் வென்றதை நாடே கொண்டாடிக் கொண்டிருக்கும் நிலையில் குறுக்குப் புத்தி கொண்ட பாகிஸ்தான் பத்திரிகையாளர் ஒருவர் சாக்‌ஷியையும், இந்தியாவைும் கிண்டலடித்து டிவிட்டரில் கருத்துப் போட்டு இப்போது இந்தியர்களிடம் வாங்கிக் கட்டி வருகிறார். சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனும் அந்த பத்திரிகையாளருக்கு நன்றாக சூடு கொடுத்துள்ளார்.

அந்தப் பத்திரிகையாளரின் பெயர் உமர் குரேஷி. பாகிஸ்தானைச் சேர்ந்த இவர் சாக்‌ஷி மாலிக் பதக்கம் வாங்கியதைக் கொண்டாடிய இந்தியர்களைக் கேலி செய்திருந்தார். இதற்கு அமிதாப் பச்சன் சூடாக பதிலடி கொடுத்தார்.

அதேபோல மூத்த பத்திரிகையாளர் சேகர் குப்தா உள்ளிட்ட பலரும் கூட குரேஷிக்கு கண்டனம் தெரிவித்து டிவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளனர்.

கிண்டல்...

கிண்டல்...

23 வயதான சாக்‌ஷி மாலிக், 58 கிலோ ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியில் கிர்கிஸ்தானின் ஐசுலுவை அதிரடியாக வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்று அசத்தி விட்டார். இதை நாடே கொண்டாடிய நிலையில் பாகிஸ்தான் பத்திரிகையாளர் குரேஷிக்கு மட்டும் அது கிண்டலாகத் தோன்றியுள்ளது.

பில்டப்...

இது குறித்து அவர் வெளியிட்ட ஒரு டிவிட்டில் 119 போட்டியாளர்களை அனுப்பிய இந்தியா ஒரு வழியாக முதல் பதக்கத்தை, வெண்கலத்தை வென்றுள்ளது. இதை இப்போது 20 தங்கப் பதக்கம் வாங்கியது போல பில்டப் செய்வார்கள் பாருங்கள் என்று நக்கலடித்துள்ளார்.

நார்வே...

120 கோடி மக்கள் தொகை கொண்ட நாடு ஒரே ஒரு வெண்கலப் பதக்கத்தை மட்டுமே வென்றுள்ளது. 50 லட்சம் பேர் கொண்ட நார்வே 2 பதக்கம் வென்றுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

ராணுவம்...

இதேபோல் இன்னொரு டிவிட்டில், ‘அப்பாவி மக்களைச் சுட்டுக் கொல்வதில் இந்திய ராணுவத்திற்கு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளதாக' திமிராக ஒரு பதிவு போட்டுள்ளார் குரேஷி.

பதிலடி...

பதிலடி...

குரேஷியின் இந்த டிவீட்டுகள் இந்தியர்கள் இடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. பதிலுக்கு அவர்களும் டிவிட்டரில் குரேஷிக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.

அமிதாப்...

இதற்கு பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்த தனது டிவிட்டில் அவர், ‘ஒரு பதக்கம் என்பது எங்களுக்கு 1000 பதக்கங்களுக்குச் சமம். சாக்‌ஷி எங்களது பெருமை. ஒரு இந்தியராக பெருமைப்படுகிறோம்' என்று பதிலடி கொடுத்துள்ளார்.

மூத்த பத்திரிகையாளர்...

இதேபோல் குரேஷிக்கு மூத்த பத்திரிகையாளர் சேகர் குப்தா கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘உங்களுக்கு ரெட் கார்டு போட வேண்டும். அதற்குத் தகுதியானவர் நீங்கள். சீனாவை விட கிரேட் பிரிட்டன் 25 மடங்கு பதக்கங்களை வென்றுள்ளது' எனக் கூறியுள்ளார்.

முன்னாள் ராணுவ அதிகாரி...

ஹரீஷ் பூரி என்ற ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியும் குரேஷியை நக்கலடித்துள்ளார். இது குறித்த அவரது பதிவில், ‘இதை எல்லாம் சொல்வது யார் தெரியுமா.. 7 வீரர்களையும், 17 அதிகாரிகளையும் அனுப்பி வைத்துள்ள நாட்டைச் சேர்ந்தவர்தான்' என்று பாகிஸ்தானை அவர் கிண்டலடித்துள்ளார்.

English summary
Omar Quraishi, a journalist with Samaa TV in Pakistan, mocked India's win at the Rio Olympics 2016 in a series of tweets that invited criticism from not just the general public, but also Bollywood superstar, Amitabh Bachchan who took to Twitter to defend the country's win.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil