Don't Miss!
- Lifestyle
Today Rasi Palan 28 January 2023: இன்று இந்த ராசிக்காரர்களின் கடின உழைப்பிற்கான பலன் தேடி வரப்போகிறது...
- News
கட்டடம் இடிந்து இளம்பெண் பலியான விவகாரம்.. இடிக்கும் பணியை உடனே நிறுத்த சென்னை மாநகராட்சி ஆர்டர்!
- Finance
Budget 2023:உணவு, உரம், எரிபொருள் மீதான ,மானியங்கள் குறைக்கப்படலாம்.. அப்படி நடந்தால் என்னவாகும்?
- Sports
ஆடுகளத்தை தவறாக கணித்தோம்.. கடைசி ஓவர் எல்லாத்தையும் மாற்றிவிட்டது.. ஹர்திக் பாண்டியா பேச்சு
- Automobiles
முக்கியமான சாலையை கிழித்து கொண்டு சென்ற விசித்திரமான வாகனம்!! பதற்றத்தில் வழிவிட்ட வாகன ஓட்டிகள்...
- Technology
நம்பமுடியாத அம்சங்களுடன் மலிவு விலையில் இறங்கிய பிரபல நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச்.!
- Travel
காலம் காலமாக இஸ்லாமியர்கள் வழிபடும் சிவன் கோவில் – மனமுருகி வேண்டினால் கேட்டது கிடைக்குமாம்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
சம்பந்தம், டாக்டர் ஜானகியை ஞாபகம் இருக்கா? 20 ஆண்டுகளாக மக்கள் மனதில் பம்மல் கே சம்பந்தம்!!
சென்னை : பம்மல் கே சம்பந்தம் வெளிவந்து 20 ஆண்டு நிறைவடைந்ததையொட்டி இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார் நடிகை சிம்ரன்.
பம்மல் கே சம்பந்தம் படத்தில் கமல்ஹாசன், சிம்ரன், சினேகா, அபாஸ் போன்ற பலரும் நடித்திருந்தனர். பெண்களையும், திருமண வாழ்க்கையையும், மொத்தமாக வெறுக்கும் கதாபாத்திரத்தில் கமல்ஹாசனும், மருத்துவராக சிம்ரனும் நடித்திருந்தனர். சிம்ரனின் தோழியாக நடிகை சினேகா நடித்திருந்தார்.
இந்த படத்திற்கு கதை மற்றும் வசனங்களை எழுதியவர் கிரேசி மோகன். எப்பொழுதும் நக்கல், நையாண்டி கலந்த நகைச்சுவையும் எதார்த்தமும் கிரேசி மோகனின் எழுத்துக்களில் காணமுடியும். அந்த வகையில் இவரது ஹிட் லிஸ்டில் பம்மல் கே சம்பந்தம் படமும் ஒன்று.
அமேசான் பிரைம் ஆந்தாலஜி...கொரோனா காலத்தின் அழகிய நட்பை உணர்த்தும் ’லோனர்ஸ்’

திருமணத்தை வெறுக்கும் கமல்
பெண்களை அடியோடு வெறுக்கும் கமலஹாசன், மருத்துவ சிகிச்சைக்காக சிம்ரனின் மருத்துவமனைக்குச் செல்ல வயிற்றில் தவறுதலாக கை கடிகாரம் விழ, அதை கவனிக்காமல் அப்படியே ஆபரேஷன் செய்து விடுவார் சிம்ரன். அதன் பிறகு இவருக்கும் ஏற்படும் மோதல்களும், காதலும் இந்த படத்தின் முக்கிய அம்சமாக காட்டப்பட்டுள்ளது. இதற்கிடையில் அபாஸ் மற்றும் சினேகா காதலித்து திருமணம் செய்து கொள்ள, அவர்கள் வாழ்க்கையில் பல பிரச்சனைகள் வந்து விவாகரத்து செய்ய முடிவெடுப்பார்கள். அதன்பிறகு 2 ஜோடிகளின் வாழ்க்கையில் என்ன நடக்கிறது, இரண்டு ஜோடிகளும் எப்படி ஒன்று சேர்ந்தார்கள் என்பதை நகைச்சுவையுடன், எதார்த்தமான கதையுடன் இருக்கும் படம் தான் பம்மல் கே சம்பந்தம்.

பட்டய கிளப்பிய பாடல்கள்
இந்த படத்திற்கு இசை அமைத்தவர் தேவா. பெண்களை வெறுக்கும் கதாபாத்திரத்திற்கு கமல்ஹாசனின் கந்தசாமி மாடசாமி என்ற பாடல் ,அவர் எந்த அளவிற்கு பெண்களை வெறுக்கிறார் என்பதற்கு உதாரணமாக அமைந்திருக்கும். மேலும் காதல் பாடல்களாக அமைந்திருக்கும் சகலகலா வல்லவனே, கடோத்கஜா போன்ற பாடல்கள் இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது. இப்படத்தின் இரண்டாவது ஜோடியாக இருக்கும் அபாஸ் மற்றும் சினேகாவிற்கும் ஒரு டூயட் பாடலை கொடுத்திருப்பார்கள். இந்த படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் பாடல்களாக அமைந்ததுடன் இன்றும் ரசிகர்களால் கொண்டாடும் பாடல்களாக இருந்து வருகின்றது.

சிவனாக கமல் அலப்பறை
ஒவ்வொரு காட்சியும் தத்ரூபமாக எடுக்கப்பட்ட இந்த படத்தில் லொகேஷன் மற்றும் சில இடங்களில் போடப்பட்ட செட்டுகள் இப்படத்திற்கு கூடுதல் பலம். உதாரணத்திற்கு, சிவன் வேஷம் போட்டு கமல்ஹாசன் செய்யும் அலப்பறைகள்,அவர் பெரும் தோரணை மற்றும் டிபி கஜேந்திரனின் நடிப்பும் அல்டிமேட் காமெடி. அதில் இடம்பெற்றுள்ள செட் அனைவரையும் வியக்கவைக்கும் விதமாகவே இருக்கும்.

வழியும் சிம்ரன்
தான் செய்த தவறான ஆபரேஷனுக்காக கமல்ஹாசனிடம் வழிந்து, வழிந்து பேசும் சிம்ரனின் யதார்த்தமான நடிப்புக்கு பஞ்சமே இல்லை. கமல்ஹாசனை காதலிப்பது போல் நடிக்கத் துவங்கிய சிம்ரன் அதன் பிறகு தன்னை அறியாமல் அவரின் மேல் காதலில் விழுகிறார். ரவுடியாக சுற்றித்திரியும் கமலஹாசனின் பாடி லாங்குவேஜ் அவர் அணிந்திருக்கும் நகைகள், அவருடைய உடைகள், பேசும் விதம் என்று எதையும் பிடிக்காத சிம்ரன் அவரை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றுவதற்கு முயற்சி செய்வார். அதன் பிறகு கமல்ஹாசனின் கொள்கைகளையும், நல்ல மனதையும் புரிந்து கொள்ளும் டாக்டரான சிம்ரன். அவரை காதலிப்பதாக கூறி இறுதியாக திருமணமும் செய்கிறார்.
Recommended Video

மறக்கமுடியாத படம்
பல சுவாரஸ்யங்கள், நகைச்சுவை, சென்டிமென்ட், ஆக்ஷன், பாடல்கள் என்று அனைத்தையும் சம அளவில் கொடுத்ததே இந்தப் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம். 20 ஆண்டுகளை இப்படம் கடந்து உள்ளதால், நடிகை சிம்ரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக இப்படத்தின் போஸ்டரை பகிர்ந்து, இந்த படம் வெளிவந்து 20 ஆண்டுகள் கடந்ததை என்னால் நம்பவே முடியவில்லை, என்னுடைய கேரியரில் மறக்க முடியாத படம் என்றால் இந்த படமும் ஒன்று என்று பூரிப்புடன் பகிர்ந்துள்ளார் நடிகை சிம்ரன்.