»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

நடிகர் பாண்டியனை மிரட்டி வந்த கந்து வட்டிக்காரரை போலீஸார் கைது செய்தனர்.

புதுமைப்பெண் படத்தில் நாயகனாக அறிமுகமாகி சில ஆண்டுகளுக்கு முன்பு சினிமாவிலிருந்து கட்டாய ஓய்வுகொடுக்கப்பட்டவர் நடிகர் பாண்டியன். நீண்ட காலமாக திமுகவில் இருந்து வந்த அவர் சமீபத்தில் அதிமுகவில்சேர்ந்தார்.

இவர் ராஜு மற்றும் பாண்டியன் என்ற இருவரிடமும் ரூ. 25,000 கடன் வாங்கியிருந்ததாகத் தெரிகிறது. இதற்குயவட்டி மற்றும் அசலை சில காலத்திற்கு முன் திருப்பியும் தந்து விட்டதாக கூறப்படுகிறது.

இருப்பினும் வட்டிக்கு குட்டியைப் போட்டு மேலும் தொடர்ந்து பணம் கேட்டு இருவரும் பாண்டியனை மிரட்டிவந்தனர். ஸ்பீடு வட்டி போட்டு பணத்தைத் திருப்பித் தருமாறு அவர்கள் பாண்டியனுக்கு நெருக்கடி தந்துவந்தனர்.

இதையடுத்து நடிகர் பாண்டியன் போலீஸில் புகார் கொடுத்தார். கந்து வட்டித் தடுப்புச் சட்டத்தின் கீழ் ராஜுவைபோலீஸார் கைது செய்தனர். கந்து வட்டி தாதாவான பாண்டியன் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார்தேடி வருகின்றனர்.

Please Wait while comments are loading...