»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

சேலம் அருகே ஏற்பட்ட ஒரு கார் விபத்தில் நடிகர் பாண்டியன் காயமடைந்தார்.

இயக்குநர் பாரதிராஜாவின் "மண் வாசனை" மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார் பாண்டியன்.

இவர் தற்போது ஓரிரு படங்களில் சிறிய வேடங்களிலும், தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இன்று (வியாழக்கிழமை) சேலத்திற்குக் காரில் சென்று கொண்டிருந்தார் பாண்டியன்.

பெத்தநாயக்கன் பாளையம் அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே பயங்கர வேகத்தில் வந்து கொண்டிருந்தஒரு லாரி பாண்டியன் சென்ற கார் மீது மோதியது.

இந்த விபத்தில் பாண்டியன் உள்பட நான்கு பேர் காயமடைந்தனர். பாண்டியனின் வலது கால் எலும்பு முறிந்தது.அவர்கள் உடனடியாக சேலம் அரசு மருத்தவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்குத் தீவிர சிகிச்சைஅளிக்கப்படுகிறது.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil