»   »  பாபநாசம் வில்லன் வருண் பிரபாகர்... இப்போ குபேர ராசி ஹீரோ

பாபநாசம் வில்லன் வருண் பிரபாகர்... இப்போ குபேர ராசி ஹீரோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பாபநாசம் படத்தில் கமலின் அழகான குடும்பத்தை மிரட்டும் வில்லனாக நடித்த இளைஞன் ரோஷன் பஷீர் (படத்தில் வருண் பிரபாகராக நடித்திருப்பார்) தற்போது ஹீரோ அவதாரம் எடுத்திருக்கிறார்.

திரிஷ்யம் படத்தில் இவரின் நடிப்பைப் பார்த்து கமல் தனது பாபநாசம் படத்திலும் வில்லனாக தொடரச் செய்தார். 2 மொழி படங்களிலும் வில்லன் அவதாரம் எடுத்த ரோஷன் தற்போது குபேர ராசி படத்தின் மூலம் ஹீரோவாக மாறுகிறார்.

Papanasam Villain Roshan Basheer now Turns Hero

இயக்குநர் ராதாகிருஷ்ணன் இயக்கும் இந்தப் படத்தில் நாயகனாக ரோஷன் பஷீர், நாயகியாக அபிராமி ஆகியோருடன் வில்லனாக பிஜு நடிக்கிறார்.

கிராமத்தில் தனது வீட்டை கவுன்சிலர் ஒருவரிடம் பறிகொடுக்கும் ஒருவர் தனது சென்னை நண்பர் ரோஷனின் உதவியை நாடுகிறார். ரோஷன் வந்து அவரின் இழந்த வீட்டை எப்படி மீட்டுக் கொடுத்தார் என்பதுதான் கதையாம்.

Papanasam Villain Roshan Basheer now Turns Hero

தொழில்நுட்பங்களை மனிதர்கள் எப்படி தவறான வழிமுறைகளுக்கு பயன்படுத்துகின்றனர் என்பதை விளக்கும் விதமாக குபேர ராசி உருவாக்கி இருப்பதாக இயக்குநர் ராதாகிருஷ்ணன் தெரிவித்து இருக்கிறார்.

ஆக்க்ஷன் த்ரில்லராக உருவாகி இருக்கும் இப்படத்தை விரைவில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்திருக்கின்றனர்.

English summary
Papanasam Fame Villain Roshan Basheer Now Turned Hero Avatar. he is now playing the lead in an upcoming Tamil film titled Kubera Rasi. The film, directed by Radhakrishnan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil