Parasakthi Release date: பொங்கல் போட்டியில் களமிறங்கிய ‘பராசக்தி’.. ஜனநாயகன் படத்துக்கு பாதிப்பு இருக்கா?
சென்னை: டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா நடிப்பில் உருவாகி வரும் பராசக்தி படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லையே என்றதும் பொங்கல் போட்டியில் இருந்து படம் பின்வாங்குகிறதா? என்கிற கேள்விகள் கிளம்பின.
ஆனால், முன் வைத்த காலை பின் வைக்கக் கூடாது என உறுதியாக படக்குழு தற்போது பொங்கலுக்கே பராசக்தி படத்தை ரிலீஸ் செய்யும் முடிவுக்கு வந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட்டுள்ளனர்.

இயக்குநர் சுதா கொங்கரா தனது சமூக வலைதள பக்கங்களில் பராசக்தி படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
பொங்கலுக்கு பராசக்தி: அடுத்த ஆண்டு பொங்கலுக்கு சிவகார்த்திகேயன் நடித்துள்ள பராசக்தி படம் வெளியாகும் என முன்பே ஆகாஷ் பாஸ்கரன் ட்வீட் ஒன்றை போட்டிருந்தார். ஆனால், படத்தின் படப்பிடிப்பு தாமதமாகிக் கொண்டிருந்த நிலையில், பொங்கல் போட்டியில் பராசக்தி வருவது சந்தேகம் என்கிற பேச்சுக்கள் கோலிவுட்டில் கிளம்பின. இந்நிலையில், 2026ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி பொங்கல் பண்டிகைக்கு ஷார்ப்பாக ஜன நாயகன் படம் திரையரங்குகளில் வெளியாகும் என்கிற அறிவிப்பு தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது.
ஜன நாயகன் உடன் நேரடி மோதல் இல்லை: துப்பாக்கி கொடுத்த விஜய்யுடன் சிவகார்த்திகேயன் பொங்கல் போட்டியில் மோத உள்ளார் என்கிற பேச்சுக்கள் அடிபட்டன. விஜய்யின் ஜன நாயகன் படம் ஜனவரி 9ம் தேதி ரிலீஸ் என ஏற்கனவே தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், பராசக்தி படம் ஜனவரி 9ம் தேதி வருமா? என்கிற எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில், ஜனவரி 14ம் தேதி பராசக்தி படம் வரும் நிலையில், சுமார் 5 நாட்கள் கலெக்ஷனை ஜன நாயகன் அள்ளிவிடும் என்கின்றனர்.
பிரபாஸ் படமும் வருது: ஆனால், ஜன நாயகன் மற்றும் பராசக்தி உள்ளிட்ட 2 படங்களுக்கும் தமிழ்நாட்டில் எந்தவொரு பிரச்சனையும் இல்லை என்றாலும், தெலுங்கில் பிரபாஸின் ராஜாசாப் திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், மற்ற மாநிலங்கள் மற்றும் ஓவர்சீஸில் பிரச்சனை ஏற்படும் என்கின்றனர். எந்த படம் நல்லா இருக்கோ ரசிகர்கள் அதை கொண்டாடுவார்கள் என்பது தனிக்கதை.
கருப்பு ரிலீஸ் அறிவிப்பு வருமா?: ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா, த்ரிஷா நடித்துள்ள கருப்பு படத்தின் டீசர் வெளியான நிலையில், அந்த படமும் பொங்கலுக்கு வருமா? என்கிற எதிர்பார்ப்பும் சூர்யா ரசிகர்கள் மத்தியில் உள்ளது. எப்படி இருந்தாலும் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு பாக்ஸ் ஆபீஸில் முன்னணி நடிகர்களின் பயங்கர மோதல் இருக்கும் என்று மட்டும் தெரிகிறது.
மதராஸியை விட மாஸ் காட்டணும்: சிவகார்த்திகேயனுக்கு பராசக்தி படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் வெற்றிப் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொங்கல் விடுமுறையை டார்கெட் செய்து படத்தை வெளியிட உள்ள நிலையில், மதராஸி படத்தை விட பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வெற்றியை பராசக்தி படம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி உள்ள படம் மற்றும் இந்தி எதிர்ப்பு போராட்டத்துக்கு எதிரான கதை என்பதால், தமிழ் ரசிகர்கள் நிச்சயம் படத்தை கொண்டாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











