Don't Miss!
- Finance
ரூ.10000000000000 இழப்பு.. வெறும் 7நாளில் அதானி சாம்ராஜ்ஜியம் வீழ்ச்சி.. சந்தை மதிப்பு 51% சரிவு..!
- Automobiles
பெட்ரோல் ஸ்கூட்டர்களுக்கு சவால் விடும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை! டாப் 10 பட்டியல் இதோ!
- News
திமுகவை வீழ்த்த.. அதிமுக ஒன்று சேர்ந்தேயாகனும்.. அண்ணாமலையுடன் சேர்ந்து சிடி ரவி அளித்த கறார் பேட்டி
- Sports
டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்புவது எப்போது? ஹர்திக் பாண்டியா பளிச் பதில்..குறையை நிவர்த்தி செய்வாரா
- Lifestyle
இந்த 4 ராசிக்காரங்க ஒரே நேரத்தில் பலபேரை காதலிக்க வாய்ப்பிருக்காம்... இவங்கள லவ் பண்றவங்க உஷாரா இருங்க!
- Travel
த்ரில்லா ஒரு டூர் போகணும்ன்னு ஆசையா – இந்தியாவின் இந்த கைவிடப்பட்ட இடங்களுக்கு செல்லுங்களேன்!
- Technology
இந்த 5 போனை அடுச்சுக்க ஆளே இல்லை.! ரூ.10,000-ல் டாப் போன்கள் இவை தான்.!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
பார்த்திபன்,கௌதம் கார்த்திக்கின் பட தலைப்பு வெளியானது… வித்தியாசமான பெயரா இருக்கே !
சென்னை : பார்த்திபன் மற்றும் கௌதம் கார்த்திக் நடித்து வரும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
யுத்த சத்தம் என தலைப்புவைக்கப்பட்டுள்ள இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார்.
இரண்டாவது காதலரையும் கழட்டிவிட காத்திருக்கும் வாரிசு நடிகை.. பயங்கர அப்செட்டில் பாய் ஃபிரண்ட்!
கௌதம் கார்த்திக்கிற்கு ஜோடியாக சாய் ப்ரியா தேவாவும், ரோபோ சங்கர் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

எழில் இயக்கத்தில்
நடிகர் பார்த்திபன் மற்றும் கெளதம் கார்த்திக் இணைந்து புதிய படம் ஒன்றில் நடித்து வருகின்றனர். இப்படத்தை எழில் இயக்கி வருகிறார். இவர், விஜய் நடித்த துள்ளாத மனமும் துள்ளும், விஷ்ணு விஷால் நடித்த வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் உள்பட பல வெற்றிப் படங்களை இயக்கியவர். இந்த படத்தில் கௌதம் கார்த்திக்கு ஜோடியாக சாய் ப்ரியா தேவா நடித்துள்ளார்.

க்ரைம் மூவி
க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகி வரும் இப்படத்தில் ரோபோ சங்கர், மானோபாலா, வையாபுரி, கும்கி அஸ்வின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு டி இமான் இசையமைத்து வருகிறார். காவ்யா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் விஜய்குமரன் தயாரித்து வருகிறார்.

யுத்த சத்தம் பர்ஸ்ட்லுக்
கடந்த ஆண்டே இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. ஆனாலும் கொரோனா காரணமாக தயாரிப்பு பணிகள் தாமதமாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய்சேதுபதி வெளியிட்டார். இந்த படத்திற்கு யுத்த சத்தம் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் பார்த்திபன் மற்றும் கௌதம் கார்த்திக் இருவம் ஆக்ஷரோஷத்துடன் இருக்கிறார்கள். மேலும், போர் தொடக்கம் என்ற வாசகமும் அதில் இடம் பெற்றுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

விறுவிறுப்பான படப்பிடிப்பு
கொரோனாவால் மூடப்பட்டிருந்த திரையரங்குகள் இன்று முதல் 50 சதவிகித பார்வையாளர்களுடன் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளதால் அனைவருக்கும் ஒரு வித மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து திரையரங்கில் இப்படத்தை காணலாம் என்றும் கூறப்படுகிறது.

பல விருதுகளை குவித்தது
இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் ஒத்த செருப்பு படத்தை இந்தியில் இயக்கி வருகிறார். பார்த்திபன் இயக்கி, தயாரித்து, நடித்த ஒத்த செருப்பு படம் வெளியாகி பல விருதுகளை குவித்தது. இந்த படம் முழுவதும் பார்த்திபன் என்கிற ஒற்றைக் கதாபாத்திரம் மட்டுமே இடம் பெற்றிருந்தது. இந்தப் படத்தைப் பார்த்த பல்வேறு திரையுலக பிரபலங்களும் பார்த்திபனை வெகுவாகப் பாராட்டினார்கள்.
Recommended Video

ஒத்த செருப்பு இந்தி ரீமேக்
தற்போது, ஒத்த செருப்பு படத்தின் இந்தி ரீமேக்கின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. பார்த்திபன் இயக்கும் இப்படத்தில் அபிஷேக் பச்சன் நடித்து வருகிறார். தமிழில் பணிபுரிந்த ஒளிப்பதிவாளர் ராம்ஜி, எடிட்டர் சுதர்சன் ஆகியோர் இந்தியிலும் பணிபுரிந்து வருகிறார்கள்.

அமிதாப் பச்சன் தயாரிக்கிறார்
ஒத்த செருப்பு படத்தின் இந்தி ரீமேக்கை அமிதாப் பச்சன் தயாரித்து வருகிறார். நீண்ட வருடங்களுக்குப் பிறகு இந்தப் படத்தின் மூலம் மீண்டும் தயாரிப்பாளராக மாறியுள்ளார் அமிதாப் பச்சன். ஒத்த செருப்பு படத்தின் ஹாலிவுட் ரீமேக்கிற்காக ட்ரூ லைஸ் படத்தின் தயாரிப்பாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.