twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பிரதமரின் பெயரை உச்சரித்தாலே தேசிய விருதென்றால், ”மோடிஜீக்கு ஜே”.. பார்த்திபன் போட்ட திடீர் ட்வீட்!

    |

    சென்னை: இரவின் நிழல் படத்தின் மூலம் ஒட்டுமொத்த சினிமா உலகினரின் கவனத்தையும் கவர்ந்துள்ளார் நடிகரும் இயக்குநருமான பார்த்திபன்.

    நேற்று நடைபெற்ற லால் சிங் சத்தா படத்தின் ப்ரீமியர் ஷோ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பார்த்திபன் அமீர்கான் உடன் அமர்ந்து படத்தை பார்த்து ரசித்தார்.

    பின்னர், 'பிரதமரின் பெயரை உச்சரித்தாலே தேசிய விருதென்றால்" என அவர் போட்ட ட்வீட் பரபரப்பை கிளப்பி உள்ளது.

    அடுத்த படத்திற்கு ரெடி?..அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட லெஜண்ட் சரவணன்!அடுத்த படத்திற்கு ரெடி?..அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட லெஜண்ட் சரவணன்!

    பார்த்திபனின் இமாலய முயற்சி

    பார்த்திபனின் இமாலய முயற்சி

    உலகின் முதல் சிங்கிள் ஷாட் நான் லீனியர் படம் என்கிற அறிவிப்புடன் இரவின் நிழல் படத்தை உருவாக்கி நல்ல வசூலையும் ஈட்டி உள்ளார் பார்த்திபன். அவர் இயக்கி நடித்த ஒத்த செருப்பு சைஸ் 7 திரைப்படத்திற்கே ஏகப்பட்ட விருதுகள் குவிந்த நிலையில், அந்த படம் பாலிவுட்டில் அபிஷேக் பச்சன் நடிப்பில் உருவாகி வருகிறது. இந்நிலையில், இரவின் நிழல் படத்திற்காக பார்த்திபனின் பெரும் முயற்சிகளை பலரும் பாராட்டி வருகின்றனர்.

    விடாத ப்ளூ சட்டை மாறன்

    விடாத ப்ளூ சட்டை மாறன்

    உலகிலேயே முதல் சிங்கிள் ஷாட் நான் லீனியர் படம் இரவின் நிழல் இல்லை என்கிற சர்ச்சையை கிளப்பிய ப்ளூ சட்டை மாறன், தொடர்ந்து தனது விமர்சனங்கள் முடிந்த பிறகு பார்த்திபனை வம்பிழுத்து பேசி வருவது ரசிகர்களை கடுப்பாக்கி உள்ளது. ப்ளூ சட்டை மாறன் உருவ பொம்மைக்கு பார்த்திபன் ரசிகர்கள் செருப்பு மாலை அணிவித்ததன் காண்டு தான் இது என நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

    அமீர்கான் படத்தின் ப்ரீமியர்

    அமீர்கான் படத்தின் ப்ரீமியர்

    ப்ளூ சட்டை மாறனுக்கு பதில் அளிப்பதை நிறுத்தி விட்டு பாலிவுட் நடிகரான அமீர்கானோடு இணைந்து கொண்டு லால் சிங் சத்தா படத்தின் ப்ரீமியர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் பார்த்திபன். அந்த படத்தை பார்த்து விட்டு அவர் பதிவிட்டுள்ள ட்வீட்கள் பரபரப்பை கிளப்பி உள்ளன.

    மோடிஜீக்கு ஜே

    மோடிஜீக்கு ஜே

    "தேசிய விருதுக்கா?"

    என்ன ஒரு கலை மதிப்பு?
    பிரதமரின் பெயரை உச்சரித்தாலே தேசிய விருதென்றால், "மோடிஜீக்கு ஜே"என கோஷமிடும் கூட்டத்தில் ஒவ்வொருவருக்கும் கொடுப்பாங்களாக்கும் ஒவ்வொரு மயில் விருது." என அமீர்கான் உடன் எடுத்துக் கொண்ட போட்டோவை ஷேர் செய்து ட்வீட் போட்டிருக்கிறார் பார்த்திபன்.

    அன்பை பரப்புறீங்க அமீர்கான்

    அன்பை பரப்புறீங்க அமீர்கான்

    Laal singh Chaddha ‘பார்த்து கண் கலங்க அமீர் கானிடம் சொன்னேன், " U r just spreading LOVE through this film to a society where there's is hatred and negativity" Amazing movie. அன்பை,அர்ப்பணிப்பை, காதலை,கடமையை கண்ணியத்தை இதை வட சிறப்பாக ஒரு படத்தில் சொல்ல முடியுமா? வெறுப்பை பருப்பாய் கடைந்து,அதில் அருவருப்பையும் அவமதிப்பையும் தாளித்துக் கொட்டி Dal Makhani செய்யும் சிலர் நிறைந்த இந்நாட்டிற்கு இப்படம் அவசியம். தூர்தர்ஷனிலிருந்து சுதந்திர தினத்திற்கு பிரதமரின் கோரிக்கைப் பற்றி ஒரு வீடியோ அனுப்புங்கள் என கேட்க,நான் அனுப்ப.... தேசிய விருதுக்கா?" என்ன ஒரு கலை மதிப்பு? பிரதமரின் பெயரை உச்சரித்தாலே தேசிய விருதென்றால், "மோடிஜீக்கு ஜே"என கோஷமிடும் கூட்டத்தில் ஒவ்வொருவருக்கும் கொடுப்பாங்களாக்கும் ஒவ்வொரு மயில் விருது. என வரிசையாக இதற்காகத்தான் பார்த்திபன் அப்படியொரு ட்வீட் போட்டு தனது விளக்கத்தை கொடுத்திருக்கிறார்.

    Recommended Video

    Iravin Nizhal படத்தை பார்த்த முதல்வர் MK Stalin... அற்புதம் என்று பாராட்டு! *Kollywood
    உருட்டுன உருட்டுல

    உருட்டுன உருட்டுல

    பார்த்திபனும் பாஜகவில் ஐக்கியமாகி விட்டார் போல என நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து ட்ரோல் செய்து வருகின்றனர். உங்க விளக்கம் புரியவில்லை, குழப்பமாக இருக்கிறது என்றும், அவன் உருட்டுன உருட்டுல கந்தர்வக்கோட்டை சமஸ்தானமே தலக் புலக்னு ஆடிப் போச்சு என ட்ரோல் மீம்களையும் நெட்டிசன்கள் பார்த்திபனின் ட்வீட்டுக்கு கீழ் கமெண்ட்டாக போட்டு கழுவி ஊற்றி வருகின்றனர்.

    English summary
    Actor and Director Parthiban who watched premiere show and appreciated Aamir Khan's Laal Singh Chaddha and clarified his recent Modi praise video in his tweet.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X