Don't Miss!
- Finance
Budget 2023:உணவு, உரம், எரிபொருள் மீதான ,மானியங்கள் குறைக்கப்படலாம்.. அப்படி நடந்தால் என்னவாகும்?
- Sports
ஆடுகளத்தை தவறாக கணித்தோம்.. கடைசி ஓவர் எல்லாத்தையும் மாற்றிவிட்டது.. ஹர்திக் பாண்டியா பேச்சு
- News
முதல்வர் ஸ்டாலின் மிக நாகரீகமாக நடந்து கொண்டுள்ளார்.. அவரை பாராட்டுகிறேன்.. கே.எஸ்.அழகிரி பேட்டி!
- Lifestyle
உங்களுக்கு நரை முடி மற்றும் வறண்ட முடி இருக்கா? அப்ப இந்த டிப்ஸ்கள ஃபாலோ பண்ணுங்க...!
- Automobiles
முக்கியமான சாலையை கிழித்து கொண்டு சென்ற விசித்திரமான வாகனம்!! பதற்றத்தில் வழிவிட்ட வாகன ஓட்டிகள்...
- Technology
நம்பமுடியாத அம்சங்களுடன் மலிவு விலையில் இறங்கிய பிரபல நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச்.!
- Travel
காலம் காலமாக இஸ்லாமியர்கள் வழிபடும் சிவன் கோவில் – மனமுருகி வேண்டினால் கேட்டது கிடைக்குமாம்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
அடுத்த வித்தியாச முயற்சிக்கு தயாராகும் பார்த்திபன்.. என்ன தெரியுமா.. பாக்கலாங்களா!
சென்னை : நடிகரும் பிரபல இயக்குநருமான பார்த்திபன் எப்போதுமே வித்தியாசமான முயற்சிகளுக்கு சொந்தக்காரர்.
Recommended Video
30 ஆண்டு காலங்களை கடந்து அவர் தற்போதுவரை கோலிவுட்டில் சிறப்பாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளதற்கு இந்த வித்தயாசமும் ஒரு காரணம்.
இவரது வித்தியாசமான முயற்சிக்கு எடுத்துக்காட்டாக சமீபத்தில் வெளியாகியுள்ளது இரவின் நிழல் படம்.
தனுஷுக்கு போட்டியா போட்டோ போடுகிறாரா?... ஐஸ்வர்யாவிற்கு என்ன தான் ஆச்சு?

பிரபல இயக்குநர் பார்த்திபன்
நடிகரும் பிரபல இயக்குநருமான பார்த்திபன் எப்போதும் வித்தியாசமான முயற்சிகளுக்கு சொந்தக்காரர். இவரது முதல் படமான புதியபாதை படம் 30 ஆண்டுகளை கடந்தும் இன்றும் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய படமாக உள்ளது. இதன் இரண்டாவது பாகத்தை சிம்புவை வைத்து இயக்கவுள்ளதாக சமீபத்திய பேட்டியில் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

இரவின் நிழல் படம்
இவரது வித்தியாச முயற்சிக்கு சமீபத்திய உதாரணம் இரவின் நிழல். இந்தப் படத்திற்கு இசையமைத்ததுடன் பல விதங்களில் உதவியுள்ளார் ஏஆர் ரஹ்மான். நான் லீனியர் சிங்கிள் ஷாட் படமாக வெளியான இந்தப் படம் ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் ஒளிபரப்பப்பட்டு அனைவரையும் கவர்ந்தது.

சந்தோஷத்தை கொடுத்த இரவின் நிழல்
இந்நிலையில் தன்னுடைய முதல் படமான புதிய பாதையை அடுத்து 32 ஆண்டுகளுக்கு பிறகு இரவின் நிழல் படம் தனக்கு அதிக சந்தோஷத்தை கொடுத்துள்ளதாக பார்த்திபன் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். படம் ரசிகர்களை கவர்ந்த நிலையில், பார்த்திபனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

பார்த்திபன் வருத்தம்
இதனிடையே இது முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் படமில்லை என்றும் ஹாலிவுட்டில் முன்னதாக இதுபோன்ற ஒரு படம் வந்துள்ளதாகவும் பலரும் கூறி வருவதை சுட்டிக் காட்டிய பார்த்திபன், இங்கு உலக அளவில் முதல் முயற்சியை ஒரு தமிழன் செய்யக்கூடாது என்று மற்றொரு தமிழனே நினைப்பதாகவும் வேதனை தெரிவித்தார்.

நம்மாலும் சாதிக்க முடியும்
உலகளவிலான சாதனைகளை வெளிநாட்டவர்கள் மட்டுமே செய்ய முடியும் என்பது இல்லை என்றும் நம்மாலும் எதையும் சாதிக்க முடியும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். தன்னுடைய இரவின் நிழல் படத்தை பிரமோட் செய்யும் வகையில் அவர் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் திரையரங்குகளுக்கு விசிட் செய்து வருகிறார்.

அடுத்த வித்தியாச முயற்சி
இந்நிலையில் அடுத்த வித்தியாச முயற்சிக்கு தற்போது தன்னை தயார் செய்து வருகிறார் பார்த்திபன். அடுத்ததாக மனிதர்களே இல்லாமல் முழுக்க முழுக்க விலங்குகளை மட்டுமே வைத்து ஒரு படத்தை இவர் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இந்தப் படம் அனிமேஷன் படமாக இல்லாமல் முழுமையாக விலங்குகளை கொண்டு எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

விலங்குகளை வைத்து படம்
இதுமட்டும் நடந்தால் மிகவும் சிறப்பாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. எப்போதுமே விலங்குகளை கொண்டு உருவாக்கப்படும் படங்களுக்கு ரசிகர்கள் ஆதரவு காணப்படும். அதிலும் மனிதர்களே இல்லாமல் விலங்குகளை மட்டுமே வைத்து ஒரு படம் என்பது கற்பனைக்கே சிறப்பாக காணப்படுகிறது. அவரது இந்த முயற்சி வெற்றியடையட்டும்.