தயாரிப்பாளர்கள் சங்க துணை தலைவர் பதவியை ராஜினாமா செய்த பார்த்திபன்: என்னாச்சு?
Recommended Video

சென்னை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் துணை தலைவர் பதவியை பார்த்திபன் ராஜினாமா செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவராக விஷாலும், துணை தலைவர்களாக நடிகரும், இயக்குனருமான பார்த்திபன், பிரகாஷ் ராஜ் ஆகியோர் இருந்து வருகிறார்கள்.

இந்நிலையில் பார்த்திபன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் ஏன் ராஜினாமா செய்தார் என்று இதுவரை தெரியவில்லை. தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால் மீது அடுத்தடுத்து புகார் எழும் நிலையில் பார்த்திபன் பதவி விலகியுள்ளார்.
மேலும் இளையராஜா 75 நிகழ்ச்சி நடக்கும் நேரத்தில் அவர் ராஜினாமா செய்துள்ளது பலரையும் வியக்க வைத்துள்ளது. விஷால் சரியாக செயல்படுவது இல்லை, யார் பேச்சையும் கேட்பது இல்லை, முறைகேடுகள் செய்கிறார் என்று தொடர்ந்து தயாரிப்பாளர்கள் சிலர் குற்றம் சாட்டி வருகிறார்கள்.
இந்த சூழலில் பார்த்திபன் பதவி விலகியிருப்பது திரையுலகினரை வியக்க வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











