இட்லி கடை வெந்துவிடும்.. தனுஷ் உடன் நடிக்க முடியாமல் போன வருத்தத்தை தெரிவித்த பார்த்திபன்!

சென்னை: நடிகர் தனுஷின் இயக்கத்தில் இட்லி கடை படத்தில் நடிக்கப் போவதாக பார்த்திபன் அறிவித்து வெளியிட்ட பதிவு வைரலாகி வருகிறது. இந்த ஆண்டு இதுவரை தமிழ் சினிமாவில் வெளியான பெரிய நடிகர்களின் படங்கள் எல்லாமே தொடர்ந்து ரசிகர்களையும் விமர்சகர்களையும் முழுமையாக திருப்திப்படுத்தாத நிலையில், இன்னமும் சில முன்னணி நடிகர்களின் படங்கள் ரிலீஸுக்காக காத்துக் கொண்டிருக்கின்றன. அதில், தனுஷ் இயக்கி நடித்து வரும் முக்கியமான படம் தான் இட்லி கடை.

அப்பா கஸ்தூரி ராஜா இயக்கத்தில் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் தனுஷ் அடுத்து தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். அதன் பின்னர், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் 3 படத்தில் நடித்தார். பாடல்களை எழுதுவது, பாடுவது என தனது திறமையை கொஞ்சம் கொஞ்சமாக எக்ஸ்ப்ளோர் செய்ய ஆரம்பித்த தனுஷ் இயக்குநராக ப. பாண்டி படத்தில் புதிய அவதாரம் எடுத்தார்.

Parthiban Ropes in for Dhanush s Idly Kadai Opens Up About Missed Roles
Photo Credit:

கடந்த ஆண்டு தனுஷ் இயக்கி நடித்த ராயன் மற்றும் இந்த ஆண்டு தனுஷ் இயக்கத்தில் அவரது அக்கா மகன் பவிஷ் அறிமுகமான நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் உள்ளிட்ட படங்கள் வெளியாகி உள்ள நிலையில், அடுத்து தனுஷ் இயக்கி நடித்துள்ள இட்லி கடை அக்டோபர் 1ம் தேதி திரைக்கு வருகிறது.

இட்லி கடையில் இணைந்த பார்த்திபன்: "இன்னொரு தேசிய விருது வாங்கி இருக்க வேண்டிய 'ஆடுகளத்தில் நான் நடிக்க முடியாமல் போனதும், இணைந்து நடித்த ' சூதாடி' இடையில் நின்று போனதும், இவையாவையும் ஈடு கட்டும் விதமாக ' இட்லி கடை'யில் ஒரு சிறு மினி இட்லியாக கௌரவ வேடத்தில் நடிக்க அவரே அழைத்த போது, மறுக்காமல் ஒப்புக் கொண்டேன். நேற்று டப்பிங் நிறைவு பெற்றது.
இரும்பினும் சக்தி கொண்ட இதயத்தோடு, எறும்பினும் சுறுசுறு உழைப்போடு, சகலகலா வல்லவனாக, அகில இந்திய நட்சத்திரமாக தனுஷ் மிளிரினால்(மிருனாள் எனத் தவறாக வாசித்தால் அதற்கு நான் பொறுப்பல்ல ஏனெனில் அது தான் பிசுபிசுத்த கிசுகிசுவாய் போய் விட்டதே)அது ஆச்சர்யமில்லை என்பதை கண் கூடாகக் கண்டேன் இட்லி கடையில் . அக்டோபரில் வெந்து விடும் sorry வந்து விடும்!!!" என பதிவிட்டுள்ளார்.

Parthiban Ropes in for Dhanush s Idly Kadai Opens Up About Missed Roles
Photo Credit:

ஆடுகளத்தில் மிஸ் ஆகிடுச்சு: வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து தேசிய விருது பெற்ற ஆடுகளம் படத்தில் பார்த்திபன் நடிக்க முடியாமல் போனது குறித்தும் சூதாடி எனும் படத்தில் பார்த்திபன் நடித்து வந்த நிலையில், அந்த படமும் மிஸ் ஆனதை குறிப்பிட்டுள்ள அவர் ஒருவழியாக கடைசியில் இட்லி கடை படத்தில் மினி இட்லியாக கடைசி நேரத்தில் சேர்ந்துவிட்டதை குறிப்பிட்டுள்ளார்.

இட்லி கடை வெந்துவிடும்: அக்டோபர் 1ம் தேதி இட்லி கடை படம் வெளியாகவுள்ள நிலையில், தனது ஸ்டைலில் வெந்து விடும் என பார்த்திபன் குறிப்பிட்டுள்ளார். அதற்கு ஆதரவாகவும் ட்ரோல் செய்தும் கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன. தனுஷ் இயக்கத்தில் இந்த ஆண்டு வெளியான நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் ரசிகர்களை ஈர்க்காத நிலையில், இட்லி கடை படமாவது ரசிகர்கள் ஜீரணிக்கக்கூடிய இட்லியாக வெந்து இருந்தால் போதும் என்றே தோன்றுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X