பாலிவுட் மட்டுமில்ல ஹாலிவுட்டிலும் தயாராகிறது ஒத்த செருப்பு சைஸ் 7

சென்னை : தமிழ் சினிமாவில் தனித்துவமான படங்களில் நடிப்பதிலும் சரி,தனித்துவமான படங்களை இயக்குவதிலும் சரி தனிக்கென தனி பாணி வைத்திருப்பவர் பார்த்திபன்.பார்த்திபன்இயக்கும் பல படங்கள் சர்வதேச கவனத்தையும் ஈர்த்துள்ளன.

Recommended Video

என் படத்தை திருப்பி அனுப்பினார்கள்! - R. Parthiban|Ezhil |D Imman |Saipriya Deva| Suseenthiran

தற்போது இரவின் நிழல் என்ற படத்தை பார்த்திபன் இயக்கி உள்ளார். இந்த படம் ஜுலை 15 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளது. Non Linear முறையில் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் இது தான்.

இதற்கு முன் பார்த்திபன் இயக்கத்தில் 2019 ம் ஆண்டு ரிலீசான படம் ஒத்த செருப்பு சைஸ் 7. த்ரில்லர் படமான இந்த படத்தை பார்த்திபனே இயக்கி, அவர் மட்டுமே நடித்திருந்தார். இந்த படம் பெரும் வரவேற்பை பெற்றது. பல விருதுகளையும் இந்த படம் பெற்றது.

 Parthibans Oththa Seruppu to be remade in Hollywood

ஒத்த செருப்பு படம், மொழிகள் தாண்டி மட்டுமல்ல, நாடுகள் தாண்டியும் வரவேற்பை பெற்றது. இந்தோனேசிய மொழியில் இந்த படம் ரீமேட் செய்யப்பட்டது. இரண்டு மாதங்களுக்கு முன் ஒத்த செருப்பு சைஸ் 7 படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக படக்குழு அறிவித்தது. Single Slipper size 7 என்ற பெயரில் இந்தியில் இந்த படம் எடுக்கப்பட உள்ளது.

இந்த படத்தில் அபிஷேக் பச்சன் ஹீரோவாக நடிக்கிறார் என்றும் அறிவிக்கப்பட்டது. அபிஷேக் பச்சனின் கேரக்டருக்கு ஏற்ற வகையிலும், இந்தி ஆடியன்சிற்கு ஏற்ற வகையிலும் கதையில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாகவும், சிறிய அளவில் ஹீரோயிசம் சேர்க்கப்பட உள்ளதாகவும் பார்த்திபன் அறிவித்திருந்தார்.

 Parthibans Oththa Seruppu to be remade in Hollywood

இந்நிலையில் சமீபத்தில் டிவி ரியாலிட்டி ஷோ ஒன்றில் கலந்து கொண்ட பார்த்திபன், தான் இயக்கிய ஒத்த செருப்பு படம் விரைவில் ஹாலிவுட்டிலும் ரீமேக் செய்யப்பட உள்ளதாக தெரிவித்தார். இதை அப்படியே ரீமேக் செய்யப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பல தேசிய விருதுகள், சர்வதேச விருதுகளை வென்ற ஒத்த செருப்பு படம் ஹாலிவுட்டிலும் ரீமேக் செய்யப்பட உள்ளதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஒத்த செருப்பு படம் IMDb தளத்திற்கு 10 க்கு 8.4 என ரேட்டிங் பெற்றிருந்தது. பார்த்திபனே எழுதி, இயக்கி, தயாரித்து, நடித்த இந்த படம் ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ், இந்தியா புக் ஆஃப் ரெக்கார்டு ஆகியவற்றில் இடம்பிடித்துள்ளது. மலையாளத்தில் வெளிவந்த The Guard, கன்னடத்தில் வெளிவந்த Shanti ஆகிய படங்களுக்கு பிறகு ஒருவர் மட்டுமே நடித்து வெளியான முன்றாவது இந்திய திரைப்படம் ஒத்த செருப்பு தான்.

ஒத்த செருப்பு படத்தை முதல் முறையாக சிங்கப்பூர் தெற்காசிய திரைப்பட விழாவில் தான் பார்த்திபன் ரிலீஸ் செய்தார். அதற்கு பிறகு தான் இந்தியாவின் இந்த படத்தை அவர் ரிலீஸ் செய்தார். இந்தியாவில் சூர்யாவின் காப்பான் படத்துடன் சேர்த்து இந்த படம் வெளியிடப்பட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X