நடிகைகள் தனுஷிடம் சேரக்கூடாது.. குசும்பு பிடித்த பார்த்திபன்.. மேடையில் இப்படி பேசிட்டாரே!

சென்னை: இட்லி கடை ஆடியோ வெளியீட்டு விழா நேற்று மாலை 7 மணிக்கு நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் இயக்கி நடித்துள்ள இட்லி கடை படம் வரும் அக்டோபர் 1ம் தேதி ஆயுத பூஜையை முன்னிட்டு வெளியாகிறது. ஜி.வி. பிரகாஷ் குமார் இசையில் உருவாகியுள்ள பாடல்களை படக்குழுவினர் நேற்று வெளியிட்டனர்.

ப. பாண்டி படத்துக்குப் பிறகு மீண்டும் இந்த படத்தில் ராஜ்கிரண் முக்கிய வேடத்தில் தனுஷ் இயக்கத்தில் நடித்துள்ளார். சத்யராஜ், பார்த்திபன், நித்யா மேனன், ஷாலினி பாண்டே, இளவரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தில் நடித்த நடிகர்கள் பலரும் நேற்று நடைபெற்ற இட்லி கடை படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்று தனுஷ் பற்றி பெருமையாக பேசி விழாவை சிறப்பித்தனர்.

Parthiban Says Heroines Don t Get Close to Dhanush Idly Kadai Audio Launch Statement Sparks Buzz
Photo Credit:

தனுஷின் மேனேஜர் ஸ்ரேயாஸ் ஆரம்பத்திலேயே அரங்கை அதிர வைக்கும் அளவுக்கு தனுஷை தலைவராகவே மாற்றி பேசியது சோஷியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில், பார்த்திபன் தனுஷ் பற்றிய கிசுகிசுக்கள் குறித்து வெளிப்படையாக பேசியதும் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

நடிகைகளுடன் கிசுகிசு: அமலா பால் தொடங்கி ரவி மோகன் விவாகரத்து வரை ஏகப்பட்ட சினிமா பிரபலங்களின் விவாகரத்து தொடர்பான கிசுகிசுக்களிலும் மிருணாள் தாகூரை காதலிக்கிறார் தனுஷ் என்று பாலிவுட் வட்டாரங்கள் சமீபத்தில் கொளுத்திப் போட்டது முதல் ஏகப்பட்ட கிசுகிசுக்களில் தனுஷ் சிக்கி வரும் நிலையில், அதுகுறித்து வெளிப்படையாக பார்த்திபன் இட்லி கடை இசை வெளியீட்டு விழாவில் பகிரங்கமாகவே பேசிவிட்டார்.

நடிகைகள் தனுஷ் உடன் சேரக்கூடாது: தனுஷிடம் சேர்ந்து இருக்கக்கூடிய விஷயம், சேரவே கூடாத விஷயம் குறித்து டிடி நீலகண்டன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பார்த்திபன் தனுஷுடன் சேர்ந்திருப்பது அவரது இரு மகன்கள், சேராமல் இருக்க வேண்டியது ஹீரோயின்கள் தான். எதுக்கு சொல்றேன்னா தனுஷ் பாவம் அப்பாவி, அவருக்கு ஒரு கல்மிஷமும் தெரியாது. ஆனால், தனுஷ் உடன் போட்டோ எடுக்கிறேன்னு ஒரு சில நடிகைகள் அவரிடம் வந்து நிற்க, அது தேவையற்ற கிசுகிசுக்களை உருவாக்கி விடுகிறது. அதனால், நடிகைகள் கிசுகிசுக்காக தனுஷிடம் சேராமல் இருக்க வேண்டும் என்று பேச தனுஷ் உள்ளிட்ட பலரும் சிரித்து விட்டனர்.

Parthiban Says Heroines Don t Get Close to Dhanush Idly Kadai Audio Launch Statement Sparks Buzz
Photo Credit:

தனுஷ் இப்படி இருக்கக் கூடாது: மேலும், இன்னொரு கேள்விக்கு பதில் அளித்த பார்த்திபன் தனுஷ் இவ்வளவு வேகமாக இருக்கக் கூடாது. படப்பிடிப்பில் சில இயக்குநர்கள் மனசுக்கு பட்ட சீன்களை எல்லாம் எடுத்து வந்து கடைசியில் எடிட்டரிடம் கொடுத்து அதை நல்ல படமாக மாற்றுவார்கள். ஆனால், தனுஷ் எது தேவையோ அதை மட்டுமே எடுத்து எடிட்டரின் வேலையை குறைத்து விடுவார். சில இயக்குநர்கள் ஒரு படம் எடுக்கவே பல ஆண்டுகள் ஆக ஒரு படத்தை இயக்கியும் நடித்தும் இவ்வளவு வேகத்தில் தனுஷ் கொடுத்தால் மற்ற இயக்குநர்களுக்கு தயாரிப்பு தரப்பில் இருந்து திட்டு தான் விழும். தனுஷ் இவ்வளவு வேகமாக இருக்கக் கூடாது என ஜாலியாக பேசினார். பார்த்திபன், சத்யராஜ் என பலரும் தனுஷ் பற்றி பல சுவாரஸ்யமான விஷயங்களை பேசி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினர். தனுஷ் சகலகலா வல்லவன் என இருவரும் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X